அந்த வீடியோ இந்தியில் முசாபிர் என்றும், தெலுங்கில் சஞ்சாரி என்றும், மலையாளத்தில் யாத்ரக்காரன் என்றும் வெளியிடப்பட்டுள்ளது.
பயணியை ரஜினியும், யாத்ரக்காரனை மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலும், சஞ்சாரியை அல்லு அர்ஜுனும் வெளியிட்டுள்ளனர்.
பயணி
வீடியோ வெற்றி பெற திரையுலக பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் கூறியிருப்பதாவது,
ஐஸ்வர்யா
9 ஆண்டுகள் கழித்து இயக்கியிருக்கிறார் என்றே நம்ப முடியவில்லை. ஏழை வீட்டு காதலை அழகாக காட்டியிருக்கிறார். காதல் எக்ஸ்பர்ட் ஐஸ்வர்யா.
இது போன்று மேலும் பல வீடியோக்களை இயக்க வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளனர்.
முசாபிர் வீடியோ வெளியிட இரண்டு முறை தேதி குறித்தும் நடக்கவில்லை. மூன்றாவது முறை தேதி குறித்தது தான் நடந்திருக்கிறது.
இந்நிலையில் சஞ்சாரி வீடியோவை பார்த்த தெலுங்கு சூப்பர் மகேஷ் பாபு அதை பாராட்டி ட்வீட் செய்திருக்கிறார். ட்விட்டரில் திரும்பும் பக்கம் எல்லாம் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
தனுஷை பிரிந்த கையோடு ஐஸ்வர்யா இப்படி ஒரு வீடியோவை இயக்கியது வீண் போகவில்லை.
தனுஷின் உண்மையான காதலுக்கு ஆப்பு வைத்த லதா ரஜினிகாந்த்?