ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் ஐபிஎஸ் அதிகாரியின் பை முழுவதுமாக பச்சை பட்டாணி நிரப்பப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்ட படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.
ஒடிசாவின் போக்குவரத்து ஆணையராக இருக்கும் ஐபிஎஸ் அதிகாரி அருண் போத்ரா ட்விட்டரில் ஒரு பையில் பச்சை பட்டாணி நிரம்பியிருக்கும் படத்தைப் பகிர்ந்துள்ளார். புதன்கிழமையன்று ஜெய்ப்பூர் விமான நிலைய அதிகாரிகள் மூத்த ஐபிஎஸ் அதிகாரி அருண் போத்ராவை ஆய்வுக்கு உட்படுத்தி, அவரது பொருட்களை திறந்து காட்ட சொன்னார்கள். அப்போது அவரின் சூட்கேஸைத் திறந்து பார்த்தபோது, அதில் முழுக்க முழுக்க பச்சை பட்டாணி இருந்தது தெரியவந்தது. இது ஒரு கிலோ 40 ரூபாய்க்கு வாங்கப்பட்டது என்று அவர் கூறினார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில், “ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் பாதுகாப்பு ஊழியர்கள் எனது கைப்பையைத் திறக்கச் சொன்னார்கள்” என்று படத்துடன் எழுதியுள்ளார். இந்த சம்பவம் குறித்து போத்ரா கேலி செய்தாரா இல்லையா என்பது தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் அவரது பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது, இந்த பதிவு 60,000 க்கும் மேற்பட்ட லைக்குகளுடன் வைரலாகியுள்ளது.
இந்த நிகழ்வினை தொடர்ந்து மூத்த ஐபிஎஸ் அதிகாரி அருண் போத்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் இருந்து வெளியேறியுள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM