ஊழலுக்கு எதிராக உதவி எண் அறிமுகம்; புகாரை நேரடியாகவும் பெற பஞ்சாப் முதல்வர் முடிவு| Dinamalar

சண்டிகர்: வரும் 23ம் தேதி முதல் ஊழலுக்கு எதிராக புகார்களை தெரிவிக்க உதவி எண் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ள பஞ்சாப் முதல்வர் பக்வந்த் மான் லஞ்சம் தொடர்பான புகார்களை தனது தனிப்பட்ட வாட்ஸ் எண்ணுக்கு பொது மக்கள் அனுப்பலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெற்ற ஆம் ஆத்மி ஆட்சியை கைப்பற்றியது. அக்கட்சியின் பக்வந்த் மான், முதல்வராக நேற்று(மார்ச் 16) பதவியேற்று கொண்டார். இன்று எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் பதவியேற்று கொண்டனர்.

இந்நிலையில், பக்வந்த் மான் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: பகத் சிங் வீரமரணம் அடைந்த நாளில், ஊழலுக்கு எதிரான உதவி எண் அறிவிக்க உள்ளோம். அது எனது தனிப்பட்ட வாட்ஸ் ஆப் எண்ணாக இருக்கும். யாராவது லஞ்சம் கேட்டால், அ தனை வீடியோ / ஆடியோவாக பதிவு செய்து என்னிடம் அனுப்பலாம். ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பஞ்சாபில் இனியும் ஊழலுக்கு இடமில்லை என தெரிவித்துள்ளார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.