கர்நாடக சங்கீதம் உலகின் தொன்மையான இசைவடிவங்களில் ஒன்று. இதை உயர்ந்த நிலைக்குக் கொண்டுவந்ததில், ஏராளமான இசைக் கலைஞர்களுக்குப் பங்கு உண்டு.
அந்தவகையில்’ தமிழகத்தில் நாதஸ்வர கலையை வளர்த்ததில் ’திருவீழிமிழலை சகோதரர்கள்’ பங்கு மிகவும் அதிகம். இந்த சகோதரர்கள்’ ஒருகாலத்தில் இந்தியாவிலேயே மிகவும் புகழ்பெற்ற நாதஸ்வர இசை கலைஞர்களாக இருந்தனர். கீர்த்தனைகளை வாயால் வாடுவது போல, நாதஸ்வரத்தில் இசைப்பதில் இவர்கள் வல்லமை பெற்றவர்கள்.
அதற்காக முதலில் சங்கீதத்தை, முறையாக கற்று, அதில் மெருகேறிய பிறகு, நாதஸ்வரத்தில் வாசித்த வித்வான்களில் ’திருவீழிமிழலை சகோதரர்கள்’ குறிப்பிடத்தக்கவர்கள்.
இதில்’ திருவீழிமிழலை எஸ். சுப்பிரமணிய பிள்ளை மூத்தவர், இளையவர் எஸ். நடராஜ சுந்தரம் பிள்ளை.
சுப்பிரமணிய பிள்ளை திருவீழிமிழலையில்’ 1893 ஏப்ரல் 16 அன்று சுவாமிநாத பிள்ளை, சிவகாமி அம்மாளுக்கு மகனாக பிறந்தார். நடராச சுந்தரம் பிள்ளை, கல்யாணசுந்தரம் பிள்ளை ஆகியோர் இவருடன் கூடப் பிறந்தவர்கள். இவர்களது தாய்மாமன் நாகூர் சுப்பையா பிள்ளை பிரபல நாதஸ்வரக் கலைஞர்.
இவர்கள் தங்கள் தந்தையிடம் பாடல் கற்க தொடங்கி, பின்பு தன் தாய்மாமன் சுப்பையாவிடம் நாதஸ்வரம் கற்று’ பிறகு கச்சேரி செய்ய ஆரம்பித்து, இந்தியா முழுவதும் புகழடைந்தனர். இவர்கள் ஏராளமான கீர்த்தனைகளையும் இயற்றியுள்ளனர்.
நடிகர் சிவகார்த்திகேயன் சமீபத்தில்’ தனது பூர்விக ஊரான திருநள்ளாறில் இருக்கும்’ திருவீழிமிழலை ஊருக்கு சென்றிருந்தார். அங்குள்ள மக்களை சந்தித்த சிவா, பிறகு அங்குள்ள பள்ளிக்கும் சென்று மாணவர்களுடன் உரையாடினார். திருநள்ளாறு கோயிலுக்கும் சென்று தரிசனம் செய்தார். அந்த புகைப்படங்கள் எல்லாம் இணையத்தில் வைரலாகியது.
இதற்கிடையில் தான், இந்தியாவின் புகழ்பெற்ற நாதஸ்வர இசைக் கலைஞர்களான ’திருவீழிமிழலை சகோதரர்கள்’ தான் சிவகார்த்திகேயனின் தாத்தாக்கள் என்ற சுவாரஸ்யமான தகவல் வெளிவந்தது.
தமிழ் உட்பட மற்ற மொழி நடிகர், நடிகையெல்லாம் ஷூட்டிங் இல்லாத சமயங்களில்’ வெளிநாடுகளுக்கு பறந்து சென்று நேரத்தை கழிக்கின்றனர். ஆனால் சிவகார்த்திகேயன் அதிலிருந்து மாறாக, தன் பூர்விகத்தை தேடித்தான் செல்கின்றார். தன் சொந்தங்களை வழியே தேடி போய் சந்திக்கிறார். அவர்களுக்கு தேவையான உதவிகளையும் செய்து கொடுக்கிறார்.
சினிமாவில் எந்த பின்புலமும் இல்லாமல், யாருடைய உதவியும் இல்லாமல், தன் சொந்த திறமையால் மட்டுமே’ தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உருவெடுத்திருக்கும் சிவகார்த்திகேயன், இவ்வளவு புகழ்வாய்ந்த இசைக்கலைஞர்கள் தான் தன் முன்னோர்கள் என்று பொதுவெளியில் ஒருமுறை கூட சொன்னதில்லை.
இதற்கிடையில், சிவகார்த்திகேயன் ‘டான்’ படம்’ மே 13 ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. அயலான் படமும் ரிலீசுக்கு தயாராக உள்ளது.
தொடர்ந்து கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகும் படத்திலும் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்க உள்ளார்.
மேலும் தெலுங்கு இயக்குனர் அனுதீப்புடன், புதிய படத்தில் சிவா நடிக்கிறார். இந்த படத்திற்கு தற்காலிகமாக ‘எஸ்கே 20’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த படம் இருமொழிகளில் தயாராகிறது. இதன் முதல்கட்ட படப்பிடிப்பு காரைக்குடியில் நடந்து வருகிறது. இந்த படத்தில் உக்ரைன் நடிகை மரியா கதாநாயகியாக நடிக்கிறார்.
பீஸ்ட் படத்தில், அனிரூத் இசையில், சிவகார்த்திகேயன் வரிகளில் அரபிக் குத்து பாடல் கிட்டத்தட்ட 200 மில்லியன் வியூசை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இப்போதுதான் தெரிகிறது சிவகார்த்திகேயன் இசை ஆர்வம் எங்கிருந்து தொடங்கியது என்று!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“