லக்னோ: உத்தர பிரதேசத்தில் கடந்த 5 ஆண்டுகளில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சியில் மாபியாக் கள், கிரிமினல்கள் ஒடுக்கப் பட்டனர். பலர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். தற்போது ஆதித்யநாத் மீண்டும் முதல்வராகி உள்ளார்.
இந்நிலையில், உ.பி.யில் ஆள்கடத்தலில் ஈடுபட்ட கவுதம் சிங் என்ற ரவுடி பற்றி தகவல் தெரிவிப்போருக்கு ரூ.25 ஆயிரம் பரிசு அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, ‘நான் சரணடை கிறேன். என்னை சுட்டுவிடாதீர்கள்’ என்று எழுதப்பட்ட பதாகையுடன் கோண்டா மாவட்டம் சாப்பியா காவல் நிலையத்தில் கவுதம் சிங் சரணடைந்தார்.
இதுகுறித்து கோண்டா எஸ்பி சந்தோஷ் மிஸ்ரா கூறுகையில், ‘‘ஆள் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியான கவுதம் சிங் பற்றி தகவல் தெரிவித்தால் பரிசு என்று அறிவித்தவுடன் தலைமறைவாக தனது சகோதரர் அனில் என்பவருடன் கவுதம் சிங் சரணடைந்தார்’’ என்றார்.
– பிடிஐ