சீனாவின் BBK நிறுவனத்திற்கு கீழ் இயங்கும் விவோவின் சப்-பிராண்டான iQOO இந்தியாவில் புதிய ஐக்யூ இசட் 6 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. சமீபத்தில் வெளியான விவோ டி1 5ஜி ஸ்மார்ட்போனை காப்பி அடித்து இந்த ஸ்மார்ட்போன் வெளியிடப்பட்டுள்ளதாக ஐக்யூ வாடிக்கையாளர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
டிசைன், அம்சங்கள் என அனைத்தும் விவோ ஸ்மார்ட்போனை ஒத்ததாக இருக்கிறது. வெறும் ஸ்டிக்கர் மட்டும் மாற்றப்பட்டுள்ளதாகவும் நெட்டிசன்கள் கேலி செய்து வருகின்றனர். பிரீமியம் ஸ்மார்ட்போன்கள் குறைந்த விலை கொண்டு வருவோம் என்ற அறைகூவலுடன் மார்கெட்டுக்குள் நுழைந்த ஐக்யூ நிறுவனத்தின் இந்த செயல், வாடிக்கையாளர்களை எரிச்சலடைய செய்துள்ளது.
புதிய ஐக்யூ இசட் 6 ஸ்மார்ட்போனில் 5ஜி இணைப்பு, 50 மெகாபிக்சல் கேமரா, பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு ஆகிய அம்சங்கள் இருக்கிறது. புதிய
ஐக்யூ இசட் 6 5ஜி
ஸ்மார்ட்போன் 4GB ரேம் + 128GB மெமரி, 6 ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி, 8GB ரேம் + 126GB மெமரி ஆகிய மூன்று வேரியண்டுகளில் விற்பனைக்குக் கொண்டு வரப்படுகிறது.
Vivo T1 5G: குறைந்த விலையில் வெறித்தனமான அம்சங்கள்… சியோமியுடன் நேரடியாக மல்லுக்கட்டும் விவோ!
ஐக்யூ இசட் 6 5ஜி அம்சங்கள் (iQOO Z6 5g full specification)
iQOO Z6 ஸ்மார்ட்போன் 6.58″ அங்குல முழு அளவு எச்டி+ ஐபிஎஸ் எல்சிடி தொடுதிரையைக் கொண்டுள்ளது. இது 2408×1080 பிக்சல்கள், 120Hz ரெப்ரெஷ் ரேட்டுடன் வருகிறது. 240Hz ஹெர்ட்ஸ் டச் சேம்பிளிங் ரேட் இந்த டிஸ்ப்ளேயில் உள்ளது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 5ஜி (
Qualcomm Snapdragon
695 5G) சிப்செட் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் திறனுட்டப்பட்டுள்ளது.
ஆண்ட்ராய்டு 12 இயங்குதள அடிப்படையிலான பன் டச் 12 (FunTouch OS 12.0) ஸ்கின் கொண்டு விவோ டி1 ஸ்மார்ட்போன் இயங்குகிறது. இந்த போனில் பக்கவாட்டில் கைரேகை சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், 3.5mm ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் போன்ற அம்சங்களை இந்த போன் பெற்றுள்ளது.
ஐக்யூ இசட் 6 5ஜி கேமரா (iQOO Z6 5g camera)
ஐக்யூ இசட் 6 ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் மூன்று கேமராக்களைக் கொண்ட அமைப்புள்ளது. 50MP (f/1.8) மெகாபிக்சல் Samsung ISOCELL JN1 முதன்மை சென்சார், 2MP மெகாபிக்சல் (f/2.4) டெப்த் சென்சார், 2MP மெகாபிக்சல் (f/2.4) மேக்ரோ சென்சார் ஆகிய மூன்று கேமராக்கள் உள்ளது. செல்பிக்கள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்காக எடுக்க 16 மெகாபிக்சல் (f/2.0) கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.
இணைப்பு அம்சங்களைப் பொருத்தவரை 5G, Wi-Fi, ப்ளூடூத் 5.1, ஜிபிஎஸ் (GPS), USB Type-C போர்ட் ஆகியவை ஐக்யூ இசட் 6 5ஜி போனில் உள்ளது. ஸ்மார்ட்போனை இயக்க 5000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. அதனை ஊக்குவிக்க 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு இதில் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பாக்ஸ் உடன் சார்ஜிங் அடாப்டர் வருகிறது.
ரெஸ்டே இல்லாமல் Smartphone-களை மார்கெட்டுக்குள் தள்ளும் Redmi!
ஐக்யூ இசட் 6 5ஜி வேரியண்ட் & விலை (iQOO Z6 5g price)
ஐக்யூ இசட் 6 5ஜி ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்டின் விலை ரூ.15,999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முறையே 6ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட் விலை ரூ.16,999 ஆகவும், 8ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்டின் விலை ரூ.19,999 என்றும் விற்பனைத் தளங்களில் பட்டியலிடப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் டைனமோ பிளாக், குரோமேட்டிக் ப்ளூ ஆகிய இரு வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது. மார்ச் 22ஆம் தேதி இந்த ஸ்மார்ட்போனின் விற்பனைத் தொடங்குகிறது. பயனர்கள் Amazon ஷாப்பிங் தளம் அல்லது சில்லறை விற்பனையாளர்களிடம் இருந்து இந்த ஸ்மார்ட்போனை வாங்கிக் கொள்ளலாம்.
Read more:
Apple இப்படி செஞ்சிருக்கக் கூடாது – பயனர்கள் விரும்பிய iPhone SE-ஆ இது!50MP கேமரா கொண்ட குறைந்த விலை போன் – விற்பனைக்கு வந்த ரியல்மி சி35!108MP கேமரா; AMOLED டாட் டிஸ்ப்ளே; 5G இணைப்பு – Redmi