எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையை முடிவுக்கு கொண்டுவர அமைச்சர் எரிசக்தி காமினி லொக்குகே நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
இதன் அடிப்படையில் ,கொழும்பிலும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் உள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் பெற்றோல் மற்றும் டீசல் ஒரு பௌசர் வீதம் விநியோகிக்குமாறு அமைச்சர் காமினி லொக்குகே உத்தரவிட்டுள்ளார்.
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நிலவும் நீண்ட வரிசையை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் அமைச்சர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
உலக சந்தையில் எரிபொருள் விலைக்கு அமைய இலங்கையிலும் எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படுமா? என்று வினவியபோது அது தொடர்பாக பேச்சுவார்த்தை இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
அதேநேரம் நாட்டில் எரிபொருள் விநியோகத்தை துரிதப்படுத்துவதற்காக விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தியிருப்பதாகவும் அமைச்சர் காமினி லொக்குகே மேலும் தெரிவித்தார்.