தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடிகளான
தனுஷ்
, ஐஸ்வர்யா ஜோடி இருவரும் கடந்த 18 வருடங்களுக்கு முன்பாக காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இவர்கள் இருவரும் திடீரென கடந்த ஜனவரி மாதம் பிரிய போவதாக அறிவித்தனர். இவர்களின் இந்த முடிவு ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த கோலிவுட் வட்டாரத்திற்கும் பேரதிர்ச்சியாக அமைந்தது.
விவாகரத்து தொடர்பாக இருவரும் தங்கள் சமூக வலைதள பக்கங்களில் தனித்தனியாக அறிக்கைகள் வெளியிட்டனர். அதில், நாங்கள் இருவரும் பிரிவதாக பரஸ்பரம் முடிவு செய்துள்ளோம். மேலும் இருவரும் எங்களை சிறப்பாக புரிந்து கொள்ள நேரம் ஒதுக்குகிறோம். தயவு செய்து எங்கள் முடிவை மதித்து, இதை சமாளிக்க தேவையான தனி மனித சுதந்திரத்தை எங்களுக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்’ என்று தெரிவித்திருந்தனர்.
இவர்கள் இருவரும் பிரிவிற்கான காரணம் என்ன என்பது குறித்து கோலிவுட் வட்டாரங்கள் பரபரப்பாக பேசி வருகின்றனர். ஆனாலும் தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் விவாகரத்து செய்யவில்லை. வழக்கமான குடும்ப தகராறுதான். அவர்கள் இருவருக்கும் அறிவுரை வழங்கியுள்ளதாக தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா தெரிவித்திருந்தார். மேலும் இருவரையும் சேர்த்து வைக்க முயற்சிகள் நடைபெறுவதாகவும் தகவல்கள் வெளியானது.
ஐஸ்வர்யா செஞ்சதை தனுஷ் செய்வாரா.?: நல்ல சேதிக்காக காத்திருக்கும் ரசிகர்கள்..!
இந்நிலையில் 9 வருடங்களுக்கு பிறகு ஐஸ்வர்யா இயக்கியுள்ள ஆல்பம் பாடலான ‘
முசாபிர்
‘ இன்று மாலை வெளியாகியுள்ளது. சூப்பர் ஸ்டார்
ரஜினிகாந்த்
வெளியிட்டுள்ள இந்தப்பாடலை நடிகர் தனுஷும் தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அதில் என் பிரெண்ட் ஐஸ்வர்யாவின் மியூசிக் ஆல்பம் வெற்றி பெற வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.
அவரின் இந்த ட்வீட் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விவாகரத்து அறிவிப்பிற்கு பின்னும் தனது சமூக வலைத்தள பக்கங்களில் தனுஷ் பெயரை நீக்காமல் உள்ளார் ஐஸ்வர்யா. இந்நிலையில் அவரை பிரெண்ட் என குறிப்பிட்டு தனுஷ் வாழ்த்து தெரிவித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து நெட்டிசன்கள் ஐஸ்வர்யாவை கடுமையாக விளாசி வருகின்றனர்.
“எதற்கும் துணிந்தவன்” படம் எப்படி இருக்கு?