சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா இயக்கியுள்ள ‘
முசாபிர்
‘ ஆல்பம் பாடல் நான்கு மொழிகளில் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளை சேர்ந்த சூப்பர் ஸ்டார் நடிகர்கள் ஐஸ்வர்யாவின் ஆல்பம் பாடலை வெளியிட்டுள்ளனர். இதனை தொடர்ந்து பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்திய சினிமாவில் பிரபல நடிகராக திகழும் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், நடிகர் தனுஷுக்கும் கடந்த 2004ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் பரஸ்பரம் பிரிய உள்ளதாக அண்மையில் அறிவித்தது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியது.
விவாகரத்து அறிவிப்பிற்கு பிறகு தனது வழக்கமான பணிகளுக்கு திரும்பிய ஐஸ்வர்யா மியூசிக் ஆல்பம் இயக்கும் வேளைகளில் இறங்கினார். இந்த பாடலின் புரோமோ வீடியோ கடந்த காதலர் தினத்தன்று வெளியானது. அன்கித் திவாரி இசையமைத்துள்ள ‘முசாபிர்’ பாடலை தமிழில் அனிருத் பாடியுள்ளார்.
நீண்ட இடைவெளிக்கு பின்.. தனுஷுக்கு நடக்க போகும் நல்ல விஷயம்: ரசிகர்கள் ஹாப்பி..!
இந்நிலையில் இந்தப்பாடலின் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. தனுஷின் ‘
மாறன்
‘ படம் ஓடிடியில் கடந்த வாரம் வெளியான நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்திருந்தார்
தனுஷ்
. அவரின் இந்த ட்வீட்டை ஐஸ்வர்யா
ரஜினிகாந்த்
லைக் செய்திருந்தார். அவரின் இந்த செயல் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தற்போது ரஜினி வெளியிட்டுள்ள ஐஸ்வர்யாவின் ‘முசாபிர்’ ஆல்பம் பாடல் ட்வீட்டை தனுஷ் லைக் செய்வாரா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. விவாகரத்து அறிவிப்பு வெளியான பின்பும் தனது சமூக வலைத்தள பக்கங்களில் தனுஷ் பெயரை நீக்கம் செய்யாமல் உள்ளார் ஐஸ்வர்யா. இதனால் தனுஷுடன் அவர் விரைவில் சேர்ந்துவிடுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
“Radhe Shyam” படம் எப்படி இருக்கு ?