இந்திய சந்தையில் தொடர்ந்து வர்த்தகத்தை விரிவாக்கம் செய்து அதிகளவிலான வருமானத்தைப் பெற்று வரும் முகேஷ் அம்பானி, கௌதம் அதானி மத்தியில் யார் இந்தியாவின் பெரும் பணக்காரர் என்ற நிலையை அடைவது என்பதில் பெரும் போட்டி உள்ளது.
2022ஆம் ஆண்டில் சில நாட்கள் முகேஷ் அம்பானியின் முதல் இடத்தைக் கௌதம் அதானி கைப்பற்றியது மட்டும் இல்லாமல் உலகப் பணக்காரர்களின் டாப் 10 பட்டியலிலும் நுழைந்தார். இது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் முகேஷ் அம்பானிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது.
இந்நிலையில் 2021ஆம் ஆண்டில் கௌதம் அதானி எவ்வளவும் சம்பாதித்துள்ளார் என்பதைப் புட்டு புட்டு வைத்த ஹூரன் குளோபல் ரிச் லிஸ்ட்..!
தூள் கிளப்ப போகும் பங்குகள்.. ஐடி நிறுவனங்கள் உட்பட பல நிறுவனங்கள் லிஸ்ட்டில் உள்ளது..!
இந்திய பணக்காரர்கள்
இந்திய பணக்காரர்கள் குறித்து ஆய்வறிக்கை வெளியிட்டுள்ள ஹூரன் அமைப்பும். ஹூரன் அமைப்பு ஒவ்வொரு ஆண்டின் முடிவில் உலகப் பணக்காரர்களின் சொத்து மதிப்பு குறித்துப் பல பிரிவுகளில் ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டு வருகிறது, இதன் படி 2021ஆம் ஆண்டிக்கான அறிக்கையைத் தற்போது வெளியிட்டுள்ளது.
3,381 பில்லியனர்கள்
2021ஆம் ஆண்டில் உலகளவில் பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கை 3,381 ஆக உயர்ந்துள்ளது, 2020ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் 153 பேர் அதிகரித்துள்ளனர். 5 வருடத்திற்கு முந்தை அளவீட்டை ஒப்பிடுகையில் பில்லியனர்கள் எண்ணிக்கை 50 சதவீதம் அதிகமாகும். மேலும் இந்தியாவில் மொத்த பில்லியனர்கள் எண்ணிக்கை 249 ஆக அதிகரித்துள்ளது.
கௌதம் அதானி
இந்நிலையில் அதானி குழுமத்தின் தலைவரான கௌதம் அதானி-யின் சொத்து மதிப்பு 2022ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 49 பில்லியன் டாலர் அதிகரித்துள்ளது. இதன் மூலம் ஒரு வாரத்திற்குச் சுமார் 6000 கோடி ரூபாய் அளவிலான தொகையைச் சம்பாதித்துள்ளார் கௌதம் அதானி.
கௌதம் அதானி சொத்து மதிப்பு
இதன் மூலம் கௌதம் அதானியின் மொத்த சொத்து மதிப்பு 2021ஆம் ஆண்டின் முடிவில் 81 டாலராகவும் உயர்ந்துள்ளது. இன்றைய நிலவரத்தின் படி 91.2 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 11வது இடத்தில் உள்ளார்.
முகேஷ் அம்பானி
மேலும் முகேஷ் அம்பானி 2021ஆம் ஆண்டின் முடிவில் 24 சதவீத வளர்ச்சியில் 103 பில்லியன் டாலர் அளவிலான சொத்து மதிப்பு உடன் உள்ளார். தற்போது 91.4 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 10வது இடத்தில் உள்ளார். டாப் 10 பட்டியலில் இருக்கும் ஒரேயொரு இந்தியரும் முகேஷ் அம்பானி தான்.
Gautam Adani earned ₹6,000 crore every week in 2021, Check How rich Mukesh Ambani is
Gautam Adani earned ₹6,000 crore every week in 2021, Check How rich Mukesh Ambani is ஒரு வாரத்திற்கு ரூ.6000 கோடி சம்பாதிக்கும் அதானி.. ஷாக்கான அம்பானி..!