பேருந்தில் பயணம் செய்த மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுப்பட்ட நடத்துனரை காவல்துறையினர் கைது செய்தனர்.
திருவண்ணாமலையை சேர்ந்தவர் 22 வயது மாணவி ஒருவர் கோவை காந்திநகரில் விடுதியில் தங்கி அங்குள்ள ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தில் படித்து வருகிறார். சம்பவதன்று, சேலத்தில் இருந்து அரசு பஸ்சில் கோவைக்கு வந்து கொண்டிருந்தார்.
அப்போது பேருந்து நடத்துனர் பூவேந்திரன் அந்த மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுப்பட்டார். இதனை அடுத்து, அவரை காவல்துறையிடம் ஒப்படைக்க முயற்சி செய்துள்ளார்.
இதனை அடுத்து, பேருந்தில் இருந்து இறங்கிய மாணவி நடத்துனர் தனக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் நடத்துனரை கைது செய்தனர்.