கடந்த ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலின் போது போடிநாயக்கனூர் தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த வெற்றியை எதிர்த்து போடிநாயக்கனூர் தொகுதி வாக்காளர் மிலானி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கில் ஓ பன்னீர்செல்வம் தாக்கல் செய்த வேட்புமனுவில் சொத்துக்கள், கடன் விவரங்களை மறைத்து உள்ளதாகவும், வேட்பு மனுவை ஏற்றது சட்டவிரோதமானது என தெரிவித்திருந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
இதனை தொடர்ந்து கடந்த மாதம் இவ்வழக்கை நிராகரிக்கக்கோரி ஓ பன்னீர்செல்வம் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் தேர்தல் வழக்கு நிகராக கோரி ஓ பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அதிமுக ஒருங்கிணைப்பு பன்னீர்செல்வத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.