இயக்குனர் வெற்றிமாறன் இடம் உதவி இயக்குனராக பணியாற்றிய மதிமாறன் இயக்கிய செல்ஃபி திரைப் படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அதில் படத்தின் நாயகன் ஜி.வி.பிரகாஷ்குமார், இயக்குனர்கள் வெற்றிமாறன், மிஷ்கின், சுப்பிரமணிய சிவா, தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அதில் பேசிய வெற்றிமாறன் இயக்குநர்கள் தங்களுடைய நிறைகுறைகளை நிச்சயம் தெரிந்துகொள்ள வேண்டும். அதுவே அவர்களுக்கு நல்லது என கூறினார். மேலும் செல்ஃபி திரைப்படத்தை தான் பார்த்ததாகவும், அந்த திரைப்படம் சிறப்பாக வந்திருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் இந்த திரைப்படத்தை இயக்கி உள்ள மதிமாறனின் தந்தை தான் தனக்கு வெற்றிமாறன் என பெயர் வைத்தார் என தெரிவித்தார். ஆனால் பொல்லாதவன் திரைப்படம் எடுத்த சமயத்தில் மீம்ஸூக்கு பயந்து பெயரை மாறன் என மாற்றிக்கொள்ள யோசித்துதாகவும் நகைச்சுவையாக பேசினர். அதேபோல்
நிகழ்ச்சியில் பேசிய மிஸ்கின், செல்ஃபி படத்தின் ட்ரெய்லர் கமர்ஷியலாக இருப்பதாக கூறினார். அதற்கு பதிலளித்த கலைப்புலி எஸ்.தாணு படத்தை வெளியிடும் நான்தான் கமர்சியலாக இருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டேன் என தெரிவித்திருந்தார். இது குறித்து பேசிய வெற்றிமாறன், கமர்ஷியல் திரைப்படங்கள் எடுப்பது தவறு இல்லை. அதற்காக கவலைப்படவும் தேவையில்லை என கூறினார்.