திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கோழிக்கோடு பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்துறையின் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வந்தவர் டாக்டர் ஹரீஸ் கோடம்புழா.
பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவிகள் சிலருக்கு இவர் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இந்த நிலையில் ஆராய்ச்சி படிப்பு படிக்கும் மாணவி ஒருவர் டாக்டர் ஹரீஸ் கோடம்புழா மீது பல்கலைக்கழக நிர்வாகிகளிடம் ஒரு புகார் கொடுத்தார்.
அதில் உதவி பேராசிரியர் டாக்டர் ஹரீஸ் கோடம்புழா தனக்கு செல்போன் மூலமும் வாட்ஸ் அப்பிலும் பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். இதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்த பின்னரும் அவர் தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறியிருந்தார்.
இதையடுத்து அந்த மாணவி போலீசிலும் புகார் செய்தார். அதன்பேரில் உதவி பேராசிரியர் டாக்டர் ஹரீஸ் கோடம்புழாவை போலீசார் கைது செய்தனர். இதை தொடர்ந்து அவரை பல்கலைக்கழக நிர்வாகம் பணியில் இருந்து சஸ்பெண்டு செய்தது. மேலும் அவர் மீதான புகார் குறித்து விசாரிக்க குழுவையும் அமைத்தது.
இக்குழுவினர் நடத்திய விசாரணையில் உதவி பேராசிரியர் டாக்டர் ஹரீஸ் கோடம்புழா மாணவிக்கு தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து நேற்று பல்கலைக்கழக சின்டிக்கேட் கூட்டத்தில் உதவி பேராசிரியர் டாக்டர் ஹரீஸ் கோடம்புழாவை பணி நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து அவர் பணியில் இருந்து நீக்கப்பட்டார்.