கிரிப்டோகரன்சி எதிர்காலத்தில் தங்கத்திற்கு இணையாகலாம். தங்கத்திற்கு மாற்று கிரிப்டோகரன்சிகள் தான். தங்கத்தினை தாண்டி செல்லலாம்.
கிரிப்டோகரன்சிகள் உற்பத்தி தேவையின் அடிப்படையில் விலை ஏற்ற இறக்கம் காண்பதில்லை. அது ஒரு வகையான யூகத்தின் கீழ் வர்த்தகமாகி வருகின்றது. இது பிளாக் செயின் தொழில் நுட்பத்தில் நிகழும் வணிகம் என்பதால், அதனை அவ்வளவு எளிதில் அழித்து விடவும் முடியாது என வெவ்வேறு விதமாக கருத்துகள் நிலவி வருகின்றன.
மொத்தத்தில் கிரிப்டோகரன்சிகளில் முதலீடு செய்யலாமா? அது சரியானதா? அல்லது தவறான முடிவா? இதன் எதிர்காலம் எப்படி இருக்கும்? இதில் முதலீடு செய்யலாமா? வேண்டாமா? ஏற்கனவே செய்தவர்கள், பணத்தை எடுத்து விடலாமா? அடுத்து என்ன செய்யலாம் என்ற பல குழப்பமான நிலையே இருந்து வருகின்றது.
ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் புதிய கிரிப்டோகரன்சி வரி.. சிறு முதலீட்டாளர்களுக்கு பிரச்சனை!

தெளிவான நிலைப்பாடு இல்லை
அதிலும் இந்தியாவிலும் கிரிப்டோகரன்சிகளுக்கு பெரும் ஆதாரவும் இல்லை எனலாம். ரிசர்வ் வங்கி சொந்தமாக ஒரு கரன்சியினை அறிமுகப்படும் என்றும் அரசு அறிவித்தது. மேலும் இது குறித்தான் மசோதா தாக்கல் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இதுவரையில் இது குறித்த அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை. மொத்தத்தில் இது குறித்தான தெளிவான நிலைப்பாடு என்பது இன்னும் இல்லை எனலாம்.

முதலீட்டாளர்களுக்கு எச்சரிக்கை
இப்படி பல்வேறு குழப்பங்களுக்கு மத்தியில் இருக்கும் முதலீட்டாளார்களை மேலும் குழப்பும் விதமாக ஐரோப்பிய சந்தை கட்டுப்பாட்டாளர்கள் (பத்திரங்கள், வங்கி, இன்சூரன்ஸ் உள்ளிட்ட பலவற்றின் கண்கானிப்பு அமைப்பு) கருத்து வந்துள்ளது. கிரிப்டோ சொத்துகளில் முதலீடு செய்த அனைத்து பணத்தையும் நுகர்வோர் இழக்க நேரிடும். மேலும் பலவும் மோசடிகளுக்கு இழக்க நேரிடலாம் என்றும் கூறியுள்ளது. இது கிரிப்டோகரன்சி முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

முதலீடுகளை இழக்க நேரிடும்
ஐரோப்பிய கட்டுப்பாட்டாளர்களில் ஒருவர் நுகர்வோர் இதில் முதலீடு செய்த தொகையை இழக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் சந்தையில் பாதிக்கும் மேற்பட்ட பங்கினை (60%) கொண்ட பிட்காயின் மற்றும் எதர் உள்ளிட்ட 17000 கிரிப்டோகரன்சிகளை நுகர்வோர் வாங்குகின்றனர் என கவலை தெரிவித்துள்ளனர். மேலும் இது குறித்த முழுமையான பிரச்சனை அறியாமல் உள்ளனர் எனவும் தெரிவித்துள்ளனர்.

தவறான விளம்பரங்கள் – எச்சரிக்கை
ஆக முதலீட்டாளர்கள் இது குறித்தான தவறான விளம்பரங்களில் இருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குறிப்பாக நுகர்வோர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என கூறியுள்ளனர்.
இந்தியாவிலும் கிரிப்டோகரன்சி முதலீட்டாளர்கள் கணிசமாக உள்ள நிலையில், கிரிப்டோ முதலீடுகள் பற்றி எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
Be ready to lose your money in cryptocurrencies, EU regulatory warn crypto-assets
Be ready to lose your money in cryptocurrencies, eu regulatory warn crypto-assets/கிரிப்டோகரன்சியில் உங்கள் பணத்தை இழக்க தயாராகுங்கள்.. எச்சரிக்கும் EU கட்டுப்பாட்டாளர்கள்!