சாம்சங் F Series Samsung Galaxy F23 5G போன், முதன்முறையாக Frevolutionary அம்சங்களுடன் வெளியாகி டெக் சந்தையில் புயலை கிளப்பியுள்ளது; அது அளிக்கும் சிறந்த அம்சங்களை பாருங்கள்!

கடந்த சில ஆண்டுகளில், மிகப்பெரிய தொழில்நுட்ப மேம்படுத்தல்களை சாம்சங் நிறுவனம் ஸ்மார்ட்போன் வாயிலாக பயனர்களிடத்தில் கொண்டுவந்துள்ளது. கேமரா செயல்திறனில் இருந்து, பயனுள்ள வடிவமைப்பு, பேட்டரி திறன் வரை நியாயமான விலையில் சாம்சங் வாடிக்கையாளர்களுக்கு கொடுத்து வருகிறது. எனவே, சாம்சங்கின் புதிய தயாரிப்புகள் குறித்து ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. அந்தவகையில் புதிய நட்சத்திரமாக Samsung Galaxy F23 5G நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் பட்டியலில் சேர்ந்துள்ளது.

Galaxy F Series வகையில் முதன்முறையாக பல அம்சங்களை உள்ளடக்கி வெளியாகியுள்ளது, இந்த ஸ்மார்ட்போனை இன்னும் பிரமாண்டமாக்குகிறது. மேலும், 15k விலைப் பிரிவில் சிறந்த ஸ்மார்ட்போனாக திகழ்கிறது! Snapdragon 750G Processor, 120Hz Gorilla Glass 5 display, Voice Focus, Power Cool Technology, RAM Plus, 50MP triple camera with 123-degree Ultra Wide Lens and Auto Data Switching போன்றவை F சீரிஸின் புதுமையான அம்சங்களாகப் பார்க்கப்படுகிறது.

இந்த சிறப்பம்சங்கள் உங்களை திருப்தியடைய செய்யாது என்று நீங்கள் நினைத்தால், Samsung Galaxy F23 5G ஸ்மார்ட்போனின் விலை அந்த காரியத்தை செய்யும். இதன் தொடக்க விலையான ரூ.14,999 உங்களை மனங்களை நிச்சயம் வெல்லும்!

Galaxy F23 5G ஆனது F சீரிஸுக்கு கொண்டுவரும் மிகப்பெரிய அம்சங்களை குறித்து TOI விரிவாக அலசுகிறது. அனைவரையும் இந்த ‘Frevolutionary’ ஸ்மார்ட்போன் திரும்பிப்பார்க்க செய்யும்!

முதல் முறையாக Snapdragon 750G Processor உடன் ‘Frevolutionary’ செயல்திறனை அனுபவிக்கலாம்

GenZ தலைமுறையினருக்கு அசாதாரண கேமிங் அனுபவம் மற்றும் மென்மையான செயல்திறனின் தேவை குறித்து சாம்சங் தெரிந்துகொண்டது. சாம்சங் இதை கணக்கில் எடுத்துக்கொண்டது. இதனால், அதன் Galaxy F23 5G ஸ்மார்ட்போனை Qualcomm Snapdragon 750G processor மூலம் இயக்கியுள்ளது. இது வேகமான மற்றும் அதிசக்தி வாய்ந்த Snapdragon processor மூலம் இயக்கப்படும் முதல் Galaxy F தொடர் ஸ்மார்ட்போன் ஆகும். Snapdragon 750G processor பல AI அம்சங்களை வழங்குகிறது. செயல்பாடுகளையும் மேம்படுத்துகிறது. இது super-fast processing, efficient multi-tasking and a superior HDR gaming experience ஆகியவற்றிற்கு உதவுகிறது. உங்களுக்குப் பிடித்த கேம்களை எந்த தடங்கலும் இன்றி விளையாடலாம்.

‘Frevolutionary’ Voice Focus அம்சம்

Samsung Galaxy F23 5G ஸ்மார்ட்போனில் பேசுவது எல்லாவற்றையும் போலவே மென்மையான அனுபவமாக இருப்பதை உறுதிசெய்ய, Galaxy F23 5G ஆனது அனைத்து புதிய Voice Focus அம்சத்துடன் வருகிறது. இதனால் உங்கள் குரல் எல்லா நேரங்களிலும் சத்தமாகவும் தெளிவாகவும் இருக்கும். முதன் முதலாக Galaxy F Series-இல் Voice Foucs அம்சம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அழைப்புகளின் போது தேவையில்லாத சுற்றுப்புற சத்ததைத் தடுக்க உதவுகிறது. இந்த அம்சத்தை ஆக்டிவேட் செய்ய, டயலர் திரையில் உள்ள Voice Focus ஐகானைக் கிளிக் செய்யவும். தேவையற்ற சத்தங்களை அகற்றுவது நல்லது தானே!

Frevolutionary cooling அம்சமான Power Cool Tech தொழில்நுட்பம் ஸ்மார்ட்போன் சூடாகும் தன்மைக்கு விடையளிக்கிறது!

இந்தியாவில் கோடை காலம் நெருங்கிவிட்டது. உங்கள் வெளிப்புற வெப்பநிலையில் ஏற்படும் இந்த மாற்றத்தை உங்களால் கட்டுப்படுத்த முடியாது என்றாலும், Samsung Galaxy F23 5G ஆனது, தனது புதிய Power Cool Technology உதவியுடன் ஸ்மார்ட்போனின் வெப்பநிலையைக் கட்டுப்படுத்தும் ஆற்றலை வழங்குகிறது. எளிமையாகச் சொல்வதென்றால், கேம்களை விளையாடுவது, அதிகமாக வீடியோக்களை பார்ப்பது அல்லது அதிக நேர பிரவுசிங் போன்ற கடினமான பணிகளுக்கு ஸ்மார்ட்ஃபோனைப் பயன்படுத்தும்போது கூட, இந்த அம்சம் ஸ்மார்ட்போனை வெப்பமாக்கல் கவனித்துக்கொள்கிறது. இந்த அம்சம் ஸ்மார்ட்போனின் செயல்திறன் சிறந்ததாக இருப்பதை உறுதிசெய்கிறது. நீங்கள் அதை வெப்பமடையாமல் நீண்ட நேரம் தேவைப்படும் பணிகளுக்குப் பயன்படுத்தலாம். Power Cool Technology Galaxy F சீரிஸில் முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன் வெப்பமாவதன் காரணமாக அதன் வேகம் குறைவது குறித்து, நீங்கள் இனி கவலைப்பட வேண்டியதில்லை!

முதன்முதலாக Frevolutionary protection உடன் வரும் 120Hz Gorilla Glass 5 Display

டிஸ்ப்ளே பொருத்தவரை, Samsung எப்போதும் ஒரு உறுதியான நிறுவனமாக இருந்து வருகிறது. பல ஆண்டுகளாக, முழு Galaxy தொடரிலும் பல மேம்படுத்தல்களுடன் காட்சி அனுபவத்தை நேர்த்தியாக செய்துள்ளது. இந்த முறையும் Samsung அதே தரத்தைத் தொடர்ந்துள்ளது! Samsung Galaxy F23 5G ஆனது Corning Gorilla Glass 5 மூலம் பாதுகாக்கப்பட்ட full-HD+ Infinity-U 6.5-inch 120Hz display உடன் வருவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. இது smoothest scrolling வசதியுடன் கூடிய 120Hz Refresh rate கொண்ட டிஸ்ப்ளே என்பதை மறந்து விட வேண்டாம். Corning Gorilla Glass 5 பாதுகாப்பும் உடன் இருப்பதால், ஸ்மார்ட்போன் பயன்படுத்துபோது எந்த வித பயமும் உங்களுக்கு இனி உங்களுக்கு இருக்காது!

முதன்முதலாக சுதந்திரமான செயல்திறனை வெளிப்படுத்துவதற்காக Frevolutionary performance கொண்ட RAM Plus அம்சம்

சிறந்த ஸ்மார்ட்போன் என்பது, பல பணிகளை எளிதாக செய்யவும், செயல்திறனில் எந்த சமரசமும் இல்லாமல் இருப்பதும் ஆகும். Samsung Galaxy F23 5G ஆனது அதன் RAM Plus அம்சத்தின் வாயிலாக பயனர்களுக்கு இந்த அனுபவத்தை வழங்குகிறது. இது Galaxy F தொடர் ஸ்மார்ட்போன்களில் முதன்முறையாக நிறுவப்பட்டிருக்கும் அம்சமாகும். இந்த அம்சமானது, ஒவ்வொரு செயலையும் துல்லியமாகச் செய்ய உதவுகிறது. Samsung Galaxy F23 5G இல் உள்ள RAM Plus அம்சம், ஏற்கனவே உள்ள உங்கள் RAM அளவை உயர்த்தி அதை இரட்டிப்பாக்கும்! அதாவது 6GB வேரியண்ட் 12GB ரேம் வரை AI தொழில்நுட்பத்தின் விரிவாக்கம் செய்யப்படும். நீங்கள் கேமிங் அல்லது ஸ்ட்ரீமிங் செய்யும் போதோ ஒட்டுமொத்த செயல்திறனை வெளிப்படுத்த இந்த RAM Plus அம்சம் பயன்படுகிறது.

முதன்முதலாக Frevolutionary connectivity உடன் வரும் Auto Data Switch அம்சம்

இப்போது, உங்கள் ஸ்மார்ட்போனில் Dual SIM இருப்பது ஒரு பேரின்பமாக இருக்கலாம். ஏனெனில் இது எல்லா நேரங்களிலும் இணைக்கப்பட்டிருக்கும் நன்மையை உங்களுக்கு வழங்குகிறது. இருப்பினும், உங்கள் முதன்மை சிம் நெட்வொர்க் இல்லாத இடத்தில் இருக்கும்போது தான், Galaxy F23 5G ஸ்மார்ட்போனின் Auto Data Switch அம்சம் உங்களுக்கு துணையாக இருப்பதை நீங்கள் உணர்வீர்கள்! முதன்முறையாக Galaxy F சீரிஸில் இந்த அம்சம் கொண்டுவரப்பட்டுள்ளது. உங்கள் முதன்மை சிம் நெட்வொர்க் இல்லாத பகுதியில் இருந்தாலும், உங்கள் இரண்டாம் சிம்மில் இருந்து அழைப்புகளை மேற்கொள்ளவும், பெறவும் அல்லது டேட்டாவைப் பயன்படுத்தவும் இந்த அம்சம் உங்களை அனுமதிக்கிறது. இது நீங்கள் எங்கு சென்றாலும் வேலை மற்றும் உங்கள் அன்புக்குரியவர்களுடன் தொடர்பில் இருக்க உதவுகிறது.

முதன்முதலாக Frevolutionary visual experience வழங்கும் 50MP triple camera with 123° Ultra-wide lens

ஒரு ஸ்மார்ட்போனின் Camera Specifications ஒரு குறிப்பிட்ட ஸ்மார்ட்போனை நாம் தேர்வுசெய்வதா, இல்லையா என்பதை தீர்மானிக்கிறது. Samsung Galaxy F23 5G ஆனது அனைத்து அம்சங்களும் அடங்கிய சந்தையில் முதல் 50MP triple camera with 123 degree Ultra Wide lens-ஐ கொண்டு வந்திருக்கிறது. 123 degree Ultra Wide lens பரந்த நிலப்பரப்புகளை படம்பிடிக்க உதவுகிறது. மேலும் பயனர்கள் எடுக்கும் படங்களுக்கு ஒரு தனித்துவமான பார்வையை அளிக்கிறது. Samsung’s iconic Single Take அம்சத்துடன் இந்த ஸ்மார்ட்போன் கேமரா வருகிறது. இது ஒரே நேரத்தில் 10 விதமான படங்கள் மற்றும் வீடியோக்களை கிளிக் செய்ய உதவுகிறது. இதில் சிறந்த படத்தையும் இந்த அம்சம் தேர்வு செய்து வழங்குகிறது. எனவே, உங்கள் Image Game-ஐ மேம்படுத்த நீங்கள் இந்த ஸ்மார்ட்போனைப் பயன்படுத்தலாம். Galaxy F23 5G கேமரா என்பது தெளிவான காட்சிகளைக் கணக்கிடுவதற்கான ஒரு சக்தியாகும்! இது உங்கள் எதிர்பார்ப்பை விட அதிகமானதாக இருக்கும்!

சிறந்த ஸ்மார்ட்போன் சந்தையில் Frevolutionary price-இல் கிடைக்கிறது!

நீங்கள் Galaxy F23 5G ஏற்கனவே உறுதியாக வாங்க நினைத்திருந்தால், இதைச் செய்ய இதுவே சரியான நேரம்! 4GB+128GB வேரியண்ட் தற்போது ரூ.14,999 ஆகவும், 6GB+128GB வேரியண்டின் விலை ரூ.15,999 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமா… இல்லை; உங்களுக்கு ரூ.1000 மதிப்புள்ள ICICI Bank-இன் உடனடி கேஷ்பேக்கும் வழங்கப்படுகிறது. மிகச்சிறந்த செயல்திறனை அளிக்கும் முதன்மை அம்சங்களுடன், Samsung Galaxy F23 5G ஒரு தெளிவான வெற்றியாளராக சந்தையில் உள்ளது! நீங்கள் உழைத்து சேர்த்த பணத்தை வீணடிக்காமல், அனைத்து அம்சங்களையும் குறைந்த விலையில் இந்த ஸ்மார்ட்போன் உங்களுக்கு வழங்குகிறது. எனவே, உங்கள் ஸ்மார்ட்போன் தேர்வில் Galaxy F23 5G அவசியம் இடம்பெறும்!

புதிய Samsung Galaxy F23 5G ஸ்மார்ட்போனை
Samsung
அல்லது
Flipkart
தளத்திற்கு செல்லுங்கள்!

Disclaimer: The article has been produced on behalf of Samsung by the Times Internet’s Spotlight team.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.