மீரா ஜாஸ்மீன் நடிப்பில் உருவாகியுள்ள ‘
மகள்
’ திரைப்படத்தின்
டீசர்
வெளியாகியுள்ளதுசினிமாவில் பிரபல நடிகையாக இருந்தவர் மீரா ஜாஸ்மீன்.
சில படங்களே நடித்திருந்தாலும் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான நடிகையாக இருந்தார். இவர் நடிப்பில் வெளியான
ரன்
, சண்டகோழி உள்ளிட்ட திரைப்படங்கள் மிகுந்த வரவேற்பை பெற்றது. இதையடுத்து சினிமாவில் இருந்து விலகி நடிக்காமல் இருந்து வந்தார்.
கேப் விடாதீங்க ஐஸ்வர்யா, லாட்ஸ் ஆஃப் லவ் டு யு: இளம் ஹீரோ
இதற்கிடையே நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க வந்துள்ளார். மலையாளத்தில் உருவாகியுள்ள ‘மகள்’ திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகர்
ஜெயராம்
முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
குடும்ப பாங்கான திரைப்படங்களை எடுப்பதில் வல்லவரான சத்யன் அந்திகாடு இயக்கியுள்ளார்.சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ள நிலையில் தற்போது தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இந்த டீசருக்கு ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
பீஸ்ட் படத்தின் அப்டேட்: Exclusive தகவல்!