உக்ரைனில் கடத்தப்பட்ட மேயரை விடுவிக்க, ரஷ்யப் படைவீரர்கள் 9 பேரை விடுவித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைனின் மெலிட்டோபோல் நகரைக் கடந்த வாரம் கைப்பற்றிய ரஷ்யப் படையினர் மேயர் இவான் பெடரோவைச் சிறைபிடித்துச் சென்றனர்.
அவரை விடுவிப்பதற்காகப் பேச்சு நடத்தியதில், பதிலுக்கு உக்ரைன் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட ரஷ்ய வீரர்களை விடுவிக்க ரஷ்யா ராணுவம் கேட்டுக்கொண்டது.
இந்நிலையில் மெலிட்டோபோல் மேயர் இவான் பெடரோவ் நேற்று விடுவிக்கப்பட்டதாக உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி கூற்றை மேற்கோள் காட்டி இன்டர்பேக்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.