இன்று நேற்று நாளை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ரவிகுமார். தற்போது சிவகார்த்திகேயனின் அயலான் படத்தை இயக்கி வருகிறார். சைன்ஸ் ஃபிக்ஷன் படமான இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தன்னைப் பற்றிய அவதூறு செய்தியால் கடுப்பாகியுள்ளார் இயக்குநர் ரவிகுமார். அதாவது, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் இயக்குநருமான சீமானிடம் ரவிகுமார் மரியாதைக் குறைவாக நடந்து கொண்டார் என
வளைப்பேச்சு
வீடியோவில் கூறப்பட்டதாக தெரிகிறது.
இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள ரவிகுமார், தான் சீமானை சந்தித்ததே இல்லை என விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பான அவரது டிவிட்டர் பதிவில், #valaipechu நான்
சீமான்
அவர்களை சந்தித்து பேசியதே இல்லை. அவருக்கு என்னை தெரியுமா என்று கூட தெரியாது. ஆனால் நான் அவர் என்னிடம் பேசும்போது அலட்சியமாக நடந்து கொண்டதாக அவதூறு பரப்புவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நான் யாரிடமும் அலட்சியமாக நடந்துகொள்பவன் அல்ல.
நடக்காத சம்பவத்தை நீங்கள் நேரில் கண்டேன் என்று சொல்வது மிக பெரிய அவதூறு. ஆயிரக்கணக்கான மக்களுக்கு பொய்யான செய்திகளை பரப்பவேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன்.. என பதிவிட்டுள்ளார்.
ஆனால் அதற்கு வளைப்பேச்சு அந்தனன் உடனடியாக பதில் தெரிவித்து தான் பொய் சொல்லவில்லை என ஆதாரத்துடன் பதிவிட்டுள்ளார். மாநாடு பட பூஜை. நடிகர் சங்கம் எதிரில், சீமானும் சேரனும் உங்களிடம் பேசியது பொய்யா? பக்கத்திலிருந்த நான் பொய்யா? இதோ இந்த பதில் பொய்யா? என கேள்வி கணைகளை தொடுத்துள்ளார்.