சுகாதார துறை சார்பில் அமைச்சர்கள் மா.சுப்ரமணியன் மற்றும் தா.மோ. அன்பரசன் ஆகியோர் புதிய கட்டிடங்களை திறந்து வைத்தனர்.
இது தொடர்பாக சுகாதார துறை சார்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் மருத்துவ துறையில் பல்வேறு கட்டங்கள் திறப்பு விழா மற்றும் அடிக்கல் நாட்டு விழாவினை மாண்புமிகு குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்கள் மற்றும் மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் ஆகியோரால் துவக்கி வைக்கப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை விரிவுரையாளர் கூட்டரங்கில் இன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் மருத்துவ துறையில் பல்வேறு கட்டங்கள் திறப்பு விழா மற்றும் அடிக்கல் நாட்டு விழாவினை மாண்புமிகு குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்கள் மற்றும் மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் ஆகியோரால் துவக்கி வைக்கப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டத்தில், தாம்பரம் அரசு மருத்துவமனையில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் மைய கட்டடம் ரூ.6.89 கோடி மதிப்பீட்டிலும், தாம்பரம் சானடோரியத்திலுள்ள அரசு நெஞ்சக நோய் மருத்துவமனை வளாகத்தில் உள்ள நவீன புறநோயாளிகள் பிரிவு கட்டடத்தின் இரண்டாம் தளத்தில் இடைநிலை மேற்பரிசோதனை ஆய்வகம் (IRL) கட்டடம் ரூ.2.60 கோடி மதிப்பீட்டிலும்,
தாம்பரம் சானடோரியத்தில் உள்ள அரசு நெஞ்சக நோய் மருத்துவமனை வளாகத்தில் கொரோனா வைரஸ் மற்றும் இதர நோய் தொற்றுக்கான தனிமைப்படுத்தப்பட்ட பிரிவு கட்டடம் ரூ.22.00 கோடி மதிப்பீட்டிலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாவட்ட தொடக்க நிலை இடையீட்டு சேவை மைய கட்டடம் ரூ-11.39 கோடி மதிப்பீட்டில் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் திம்மராஜம் பேட்டை துணை சுகாதார நிலைய கட்டடம் ரூ.20.00 இலட்சம் மதிப்பீட்டிலும்,
ஆற்பாக்கம் துணை சுகாதார நிலைய கட்டடம் ரூ.20 இலட்சம் மதிப்பீட்டிலும், திருப்பெரும்புதூர் கலப்பு உயர் தீவிர சிகிச்சை பிரிவு கட்டடம் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டில் மாண்புமிகு குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்கள் தலைமையில் மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்களால் அடிக்கல் நாட்டி துவக்கி வைக்கப்பட்டது.
மேலும், தேசிய ஊரக நலத்திட்டத்தின் கீழ் மருந்து வழங்குபவர் பணி நியமன ஆணை 359 நபர்களுக்கு வழங்கப்பட்டது, 12 முதல் 16 வயது வரையுள்ள பள்ளி மாணவ/மாணவியர்களுக்கு கொரோனா நோய் தடுப்பூசி போடும் பணியினையும் மற்றும் கண்ணொளி காப்போம் திட்டத்தின் கீழ் 13 பள்ளி மாணவ/மாணவியர்களுக்கு மூக்கண்ணாடியினை மாண்புமிகு குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்கள் தலைமையில் மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் வழங்கினார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி மேயர் அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.