சுதந்திரம், அடிமைதனத்திற்கு இடையே சுவர் எழுப்பும் ரஷ்யா: ஜெலன்ஸ்கி| Dinamalar

பெர்லின்: சுதந்திரம் மற்றும் அடிமைதனத்திற்கு இடையே போர் மூலம் ரஷ்யா சுவர் எழுப்பி வருவதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

ஜெர்மனி பார்லிமென்டில் வீடியோ கான்பரன்சிங் முறையில் ஜெலன்ஸ்கி பேசியதாவது: தற்போது பெர்லின் சுவர் இல்லை. சுதந்திரம் மற்றும் அடிமைத்தனத்திற்கு இடையே சுவர் உள்ளது. ரஷ்யா வும் ஒவ்வொரு குண்டால் பெரிதாகி கொண்டே செல்கிறது. இந்த சுவரை ஜெர்மனி அதிபர் உடைத்து எறிய வேண்டும்.

ஜெர்மனிக்கு தகுதி வாய்ந்த தலைமைப்பதவியை வழங்க வேண்டும். நாங்கள் உங்களிடம் எதிர்பார்த்துள்ளோம். காஸ் பைப்லைன் திட்டம், போருக்கான ஒரு முன்னெடுப்பு திட்டமாக தான் உள்ளது . இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.