சுற்றுலா இ-விசாவுக்கு விதித்த தடை நீக்கம்

புதுடெல்லி:
கொரோனா வைரஸ் காலத்தில் தடை விதிக்கப்பட்டிருந்த சுற்றுலா இவிசாவுக்கு தற்போது தடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்தியா சார்பில் 156 நாடுகளுக்கு வழங்கப்பட்ட 5 ஆண்டுகளுக்கான இவிசா தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இந்த தடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் அமெரிக்கா ஜப்பான் நாடுகளுக்கு வழங்கப்பட்ட பத்தாண்டுகால சுற்றுலா விசாவுக்கான தடையும் நீக்கப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.