சென்னை தலைமைச் செயலகம் எதிரே பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற பெண்ணை, காவலர்கள் காப்பாற்றினர்.
விருகம்பாக்கத்தைச் சேர்ந்த கௌசல்யா என்ற அந்த பெண்ணுக்கு சொந்தமான வீட்டை, அதே பகுதியைச் சேர்ந்த சசிக்குமார் என்பவர் அபகரித்ததாக கூறப்படுகிறது.
தனது வீட்டை மீட்டுத் தரக்கோரி கௌசல்யா பலமுறை புகாரளித்தும் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி, தலைமை செயலகம் எதிரே அவர் தற்கொலைக்கு முயன்றார்.
இதனைக் கண்ட காவலர்கள் அவர் மீது தண்ணீர் ஊற்றி காப்பற்றி, வடக்கு கடற்கரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இது தொடர்பாக அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.