ஜப்பானில், உணவு உற்பத்தி தொழிற்சாலைகளில், பணியாளர்களுக்கு ஏற்பட்டத் தட்டுப்பாட்டை போக்க புதிய ரோபோ ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.
மோசமான பணிச்சூழல் மற்றும் கொரோனா அச்சுறுத்தலைத் தொடர்ந்து உணவு தொழிற்சாலைகளில் பணியாற்ற பலர் தயங்குவதால், ஊழியர்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
அதனை நிவர்த்தி செய்யும் விதமாக, யமாட்டோ ஸ்கேல் என்ற நிறுவனம், நூடுல்ஸ், சிக்கன், காய்கறிகள் என விதவிதமான உணவு பொருட்களை நேர்த்தியாகப் பேக் செய்யும் ரோபோவை வடிவமைத்துள்ளது.
பூட்லி என பெயரிடப்பட்டுள்ள இந்த 5 அடி உயர ரோபோவை, ஒரு கோடியே 90 லட்சம் ரூபாய்க்கு விற்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.