இந்தியாவில் வரும் 19-ம் தேதி அன்று இந்தியா – ஜப்பான் இடையேயான உச்சி மாநாடு நடைப்பெற இருப்பதாக வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்தார்.
உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவிற்கு அழைப்பு விடுத்தார். இதையடுத்து, ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா வரும் 19 மற்றும் 20-ம் தேதிகளில் இரண்டு நாள் பயணமாக இந்தியா வருகிறார்.
இந்தியா- ஜப்பான் உச்ச மாநாட்டில் இருதரப்பு உறவுகளை மறுபரிசீலனை செய்வதற்கும் மேலும் வலுப்படுத்துவதற்கும் இந்த உச்சி மாநாடு வாய்ப்பளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்.. தாக்குதலை நிறுத்த முடியாது- சர்வதேச நீதிமன்ற உத்தரவை ஏற்க மறுத்தது ரஷியா