அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அரோமிகா டீ என்ற தேயிலை நிறுவனம் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி பெயரில் டீயை அறிமுகம் செய்துள்ளது. ஜெலன்ஸ்கியின் வீரம் மற்றும் தைரியத்தை போற்றும் வகையில் அவரது பெயரில் டீயை அறிமுகப்படுத்தி உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அரோமிகா டீ நிறுவனத்தின் இயக்குனர் ரஞ்சித் பருவா கூறியதாவது:-
போரினால் பாதிக்கப்பட்ட நாட்டில் இருந்து தப்பிப்பதற்கான அமெரிக்க வாய்ப்பை நிராகரித்த உக்ரைன் அதிபரின் வீரம் மற்றும் தைரியத்தை மதிப்பதுதான் அவரது பெயரில் டீ பிராண்ட் தொடங்குவதற்கான அடிப்படை யோசனையாகும். ஜெலன்ஸ்கிக்கு இலவச பயணம் தேவையில்லை.. வெடி மருந்துகளே தேவை. இது அவரது குணாதிசயத்தை காட்டுகிறது.
உக்ரைன் அதிபருக்கு வெற்றி அருகில் இல்லை என்பதை நன்று அறிந்தவர். ஆனாலும் போராடுகிறார். அதனால், ஜெலன்ஸ்கியின் வீரம் மற்றும் தைரியத்தை போற்றும் வகையில் அவரது பெயரில் தேயிலையை அறிமுகப்படுத்தி உள்ளோம்.
ஜெலன்ஸ்கியின் வீரம், குணம் மற்றும் அசாம் தேநீர் ஆகியவற்றுக்கு இடையே ஒரு ஒப்புமையை வரைய முயற்சிக்கிறோம். ஜெலன்ஸ்கி டீ ஆன்லைனில் கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்.. மார்ச் 21ல் உச்சி மாநாடு: ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் – பிரதமர் மோடி பங்கேற்பு