குடகு: குடகு மாவட்டம் மடிக்கேரி தாலுகாவில் டயர் வெடித்து நதியில் விழுந்தது. மடிகேரியில் இருந்து மங்களூரு செல்லும் வழியில் குண்டல்பேட்டை இருந்து கேஎஸ்ஆர் அரசு பேருந்து சுப்ரமணியாவிற்கு சென்றுக்கொண்டிருந்தது. மடிக்கேரி தாலுகா பாம்பாஜே கிராமம் அருகே வந்தபோது பேருந்தின் டயர் வெடித்து விபத்துக்குள்ளானது. இதில் பேருந்து அருகில் இருந்த நதியில் விழுந்தது. இந்த விபத்தில் பேருந்தில் இருந்த 20க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு காயம் ஏற்பட்டது. விபத்தை பார்த்த பகுதி மக்கள் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த பகுதியில் ஆய்வு செய்தனர்.