டெஸ்ட் கிரிக்கெட்டில் பின்னடைவை சந்தித்த விராட் கோலி, ஜடேஜா – அதிர்ச்சி தகவல்



ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. 

இதில் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் முதலிடத்தில் ஆஸ்திரேலியாவின் மார்னஸ் லபுஸ்சேன், 2 ஆம் இடத்தில் இங்கிலாந்தின் ஜோ ரூட், 3வது இடத்தில் ஆஸ்திரேலியாவின்  ஸ்டீவன் சுமித், 4 ஆம் இடத்தில் நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இலங்கை அணிக்கு எதிரான தொடரில் சொதப்பியதால் இந்தத் தரவரிசையில் முதல் 5 இடங்களில் எப்போதுமே இடம் பிடித்திருக்கும் விராட் கோலி  5வது இடத்தில் இருந்து 4 இடங்கள் கீழிறங்கி 9வது இடத்திற்கு சரிந்துள்ளார். 10வது இடத்தில் ரிஷப் பண்ட் இடம் பெற்றுள்ளது. அதேசமயம் 6வது இடத்தில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா இடம் பெற்றுள்ளார். 

இதேபோல் பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் கம்மின்ஸ் முதலிடமும், இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 2 வது இடமும், தென்ஆப்பிரிக்காவின் காஜிசோ ரபடா 3 வது இடமும் வகிக்கிறார்கள். பகல்-இரவு டெஸ்டில் 8 விக்கெட்டுகளை அள்ளிய இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 6 இடங்கள் உயர்ந்து 4 வது இடமும் பிடித்துள்ளார். 

ஆல்ரவுண்டர் தரவரிசையில் இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்டில் 175 ரன்கள் குவித்ததுடன், 9 விக்கெட்டுகளும் வீழ்த்தியதால் முதலிடம் பிடித்த ஜடேஜா, 2வது டெஸ்டில் சரியாக விளையாடததால் 2வது இடத்துக்கு தள்ளப்பட்டார். இந்த பட்டியலில் முதலிடத்தில் வெஸ்ட் இண்டீசின் ஜாசன் ஹோல்டர் இடம் பிடித்துள்ளார். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.