தங்கத்தை குவித்து வைத்திருக்கும் ரஷ்யா, புதின் திட்டம் என்ன?! இந்தியாவுக்கு வாய்ப்பிருக்கா..?!

ரஷ்யா – உக்ரைன் மத்தியிலான போர் பிரச்சனை நாளுக்கு நாள் மோசமாகி வந்த நிலையில், இரு நாடுகளும் பேச்சுவார்த்தை துவங்கிய பின்பு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு வர்த்தகச் சந்தை இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது.

இந்தச் சூழ்நிலையில் ரஷ்யா வருமானத்தை ஈட்டும் வகையில் இந்தியா உட்பட உலகில் பல நாடுகளுக்கு மிகவும் குறைவான விலையில் கச்சா எண்ணெய் விற்பனை செய்யப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இதேவேளையில் ரஷ்ய அதிபரான விளாடிமீர் புதின் குவித்து வைத்திருக்கும் தங்கத்தை என்ன செய்வது என விடை தெரியாமல் இருக்கிறார்.

ரஷ்யா கொடுத்த சூப்பர் ஆஃபர்.. பெட்ரோல், டீசல் விலையைக் கண்டு இனி பயப்பட தேவையில்லை..!

தங்கம்

தங்கம்

உலக நாடுகள் தனது பொருளாதாரம் மற்றும் வர்த்தகச் சந்தைக்குப் பிரச்சனை வரும் போது உடனடியாகப் பணத்தைத் திரட்ட வேண்டும் என்பதற்காகத் தங்கத்தை அதிகமாகச் சேர்த்து வைக்கும். அந்த வகையில் ரஷ்யா பல வருடங்களாகத் தங்கத்தை அதிகளவில் சேர்த்து வைத்து உள்ளது.

 ரஷ்ய மத்திய வங்கி

ரஷ்ய மத்திய வங்கி

ரஷ்ய மத்திய வங்கி 2000ஆம் அண்டில் இருந்து தங்க இருப்பு அளவு சுமார் 6 மடங்கு உயர்த்தியுள்ளது. இதன் மூலம் தற்போது ரஷ்யாவிடம் சுமார் 140 பில்லியன் டாலர் மதிப்பிலான தங்கம் வைத்துள்ளது. உலக நாடுகள் ரஷ்யா மீது தடை விதித்த காரணத்தால் ரூபிள் மதிப்பு மிகப்பெரிய அளவில் சரிந்துள்ளது.

 ரூபிள் மதிப்பு
 

ரூபிள் மதிப்பு

ரூபிள் மதிப்பை மேம்படுத்தத் தங்கத்தை விற்பனை செய்வது மூலம் எளிதாகச் செய்ய முடியும், ஆனால் உலக நாடுகள் விதித்துள்ள தடை மூலம் ரஷ்ய மத்திய வங்கி வெளிநாடுகளுக்குத் தங்கத்தை விற்பனை செய்ய முடியாத நிலையில் மாடிக்குக்கொண்டு இருக்கிறது.

அச்சம்

அச்சம்

ஆனால் வர்த்தகர்கள் மற்றும் வங்கிகள் ரஷ்யாவின் தங்கத்தை மறைமுகமாக வாங்குவது அல்லது டாலர் அல்லாமல் மற்ற நாணயங்களைப் பயன்படுத்தி வாங்கும் முயற்சியில் ஈடுப்பட்டு உள்ளது. இல்லையெனில் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் அபராதம் அல்லது தடை விதிக்கும் என்ற அச்சத்தில் இப்படிச் செய்கின்றனர்.

 அமெரிக்கா, பிரிட்டன்

அமெரிக்கா, பிரிட்டன்

இதற்கும் ஆப்பு வைக்கும் வகையில் அமெரிக்காவின் செனட்டர்கள் ரஷ்யத் தங்கத்தை வாங்கும் அல்லது விற்பதைத் தடுக்கும் வகையில் இரண்டாம் நிலை தடைகளை விதிக்கத் திட்டமிட்டு வருகிறது. இதுபோன்ற இக்கட்டான நிலையில் பயன்படுத்தவே ரஷ்யா 140 பில்லியன் டாலர் மதிப்பிலான தங்கத்தைச் சேர்த்து வைத்துள்ளது.

 இந்தியா அல்லது சீனா

இந்தியா அல்லது சீனா

இந்த நிலையில் ரஷ்யா தனது தங்கத்தை இந்தியா அல்லது சீனாவிடம் விற்பனை செய்தோ அல்லது அடைமானமாக வைத்து கடன் வாங்க முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இரு நாடுகளும் அமெரிக்காவுடன் bipartisan ஒப்பந்தம் போட்டு உள்ள காரணத்தால் ரஷ்யாவின் தங்கத்தை வாங்கினால் வர்த்தகத் தடை அல்லது அபாரதம் விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 இந்தியாவுக்குப் பிரச்சனை

இந்தியாவுக்குப் பிரச்சனை

ஏற்கனவே இந்தியா ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு அமெரிக்காவிடம் bipartisan ஒப்பந்த விதிமுறை மீறப்பட்டு உள்ளதா இல்லையா என்பதை உறுதி செய்யப்பட்டுப் பின்பே ரஷ்யாவிடம் எண்ணெய் ஒப்பந்தத்தை உறுதி செய்தது. இந்நிலையில் தங்கத்தை வாங்குவது இந்தியா – அமெரிக்காவின் வர்த்தக ஒப்பந்தத்தில் பாதிப்பை ஏற்படுத்தலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Russia central bank having Big pile of gold; Can India buy at discount price

Russia central bank having Big pile of gold; Can India buy at discount price தங்கத்தைக் குவித்து வைத்திருக்கும் ரஷ்யா.. விளாடிமிர் புதின் திட்டம் என்ன..?! இந்தியாவுக்கு வாய்ப்பிருக்கா..?!

Story first published: Thursday, March 17, 2022, 14:13 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.