தங்களது விருப்பத்திற்கு வீடியோக்களை வெளியிட்டு யூடியூபர்கள் பணபலன் அடைகின்றனர், ஆனால் அது பல்வேறு சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்பட காரணமாகிறது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி புகழேந்தி தெரிவித்துள்ளார்.
தமிழக முதலமைச்சரை அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட சாட்டை துரைமுருகனின் ஜாமீனை ரத்து செய்யக் கோரிய வழக்கில் நீதிபதி இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சைபர் குற்றங்களை விசாரிக்க எத்தனை காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்? அவர்களில் விசாரணை அதிகாரி யார்? என்பது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார்.