ரஷ்யாவின் ஏவுகணைகள் தாக்கியதில் பனாமா நாட்டின் கப்பல் கருங்கடலில் மூழ்கியுள்ளது.
உக்ரனுக்குள் கடந்த மாதம் 24ஆம் திகதி புகுந்த ரஷ்ய படையில் தொடர்ந்து போர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இதன் காரணமாக பல உயிரிழப்புகள் மற்றும் பெரியளவில் உக்ரைன் நாட்டின் பல முக்கிய இடங்கள், கட்டிடங்கள் அழிக்கப்பட்டும் சேதப்படுத்தப்பட்டும் உள்ளன.
பனாமா நாட்டை சீண்டிய ரஷ்யா
இந்த நிலையில் போர் தொடங்கியதில் இருந்து கருங்கடலில் ரஷ்ய ஏவுகணைகளால் மூன்று பனாமா நாட்டு கொடி கொண்ட கப்பல்கள் தாக்கப்பட்டுள்ளது.
இதில் ஒரு கப்பல் முழுவதுமாக மூழ்கிவிட்டதாக பனாமா அரசு தெரிவித்துள்ளது, உக்ரைன் துறைமுகம் அருகே இச்சம்பவம் நடந்துள்ளது.
இது தொடர்பாக பனாமா கடல்சார் ஆணைய நிர்வாகி நோரியல் அரவ்ஸ் கூறுகையில், ரஷ்ய ஏவுகணைகளால் தாக்கப்பட்ட மூன்று கப்பல்கள் எங்களுடையது தான்.
இதில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை, உள்ளிருந்த பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர்.
பொருள் சேதங்கள்
ஆனால் பெரியளவில் எங்களுக்கு பொருள் சேதம் ஏற்பட்டுள்ளது.
Namura Queen, Lord Nelson and Helt ஆகிய மூன்று கப்பல்கள் தான் தாக்கப்பட்ட கப்பல்கள் ஆகும்.
குறைந்தது 10 பனாமா கொடி தாங்கிய கப்பல்கள் இன்னும் கருங்கடலில் உள்ளன. ஆனால் ரஷ்ய கடற்படை கப்பல்களை அப்பகுதியை விட்டு வெளியேறுவதைத் தடுக்கிறது என கூறியுள்ளார்.
கப்பல்கள் எப்போது தாக்கப்பட்டன என்ற திகதி விபரங்களை நோரியல் வெளியிடவில்லை.
போரில் ஈடுபடும் ரஷ்ய வீரர்கள் சாப்பிடும் அதிர்ச்சியளிக்கும் உணவுகள்! வீடியோ வெளியானது