தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ள நிலையில், தற்போதைய நிலவரம் தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதன்படி, தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 70 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நேற்று 77 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று மேலும் குறைந்துள்ளது. இதன்மூலம் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34 லட்சத்து 52 ஆயிரத்து 215 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் இன்று 20 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
இன்று ஒரே நாளில் 146 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34 லட்சத்து 13 ஆயிரத்து 394 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் தமிழகத்தில் இன்று ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 38,025 ஆக அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் 796 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இதையும் படியுங்கள்..
இலங்கைக்கு ரூ.7,580 கோடி இந்தியா கடனுதவி- டெல்லியில் ஒப்பந்தம் கையெழுத்து