வாஷிங்டன்:துணை அதிபர் கமலா ஹாரிஸ் குறித்து குறிப்பிடும் வார்த்தையை, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தவறாக பயன்படுத்தியது சிரிப்பலையை ஏற்படுத்தியது.
அமெரிக்காவில் அதிபரின் மனைவியை, ‘பர்ஸ்ட் லேடி’ என அழைப்பர். வாஷிங்டனில் நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில், கமலா ஹாரிஸ் பங்கேற்கவில்லை.இதை ஜோ பைடன் குறிப்பிடுகையில், ”பர்ஸ்ட் லேடியின் கணவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது,” என கூறினார். அப்போது அங்கிருந்த சிலர், ‘அப்படி பார்த்தால், உங்களுக்கா கொரோனா’ என, கேட்டனர்.இதையடுத்து தன் தவறை உணர்ந்த ஜோ பைடன், ”என்னுடைய பர்ஸ்ட் லேடி நலமாக இருக்கிறார்.
செகண்ட் லேடியின் முதல் ஜென்டில்மேனுக்குதான் கொரோனா,” என, சமாளித்தார். இதனால், நிகழ்ச்சி நடந்த அரங்கில் சிறிது நேரம் சிரிப்பலை ஏற்பட்டது.இதற்கு முன்பும், இதுபோல் தவறான வார்த்தைகளைப் பயன்படுத்தி ஜோ பைடன் சிக்கியுள்ளார். ஒரு முறை கமலா ஹாரிசை, அதிபர் என கூறினார். சமீபத்தில் உக்ரைன் குறித்து குறிப்பிடும்போது, தவறாக ஈரான் என குறிப்பிட்டார்.
வாஷிங்டன்:துணை அதிபர் கமலா ஹாரிஸ் குறித்து குறிப்பிடும் வார்த்தையை, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தவறாக பயன்படுத்தியது சிரிப்பலையை ஏற்படுத்தியது.அமெரிக்காவில் அதிபரின் மனைவியை,
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.