பிரபல நடிகர் ராஜசேகரின் மனைவி வீட்டு கடனை கட்ட முடியாமல் தவித்து வரும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
தமிழ் திரையுலகம் மற்றும் சின்னத்திரையில் பிரபல நடிகராக இருந்தவர் ராஜசேகர்.
இவர் ஒளிப்பதிவாளர், இயக்குனர் என பன்முகத்தன்மை கொண்டவர் ஆவார்.
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரில் நடித்து பட்டி தொட்டியெங்கும் ராஜசேகர் பிரபலமானார்.
இந்நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு ராஜசேகர் உடல் நலக்குறைவால் திடீரென மரணமடைந்தார்.
ராஜசேகர் இறப்பதற்கு முன்பு சென்னை வடபழனியில் வீடு ஒன்றை வாங்கியுள்ளார். அந்த வீட்டிற்கு பாதி தொகையை கொடுத்த நிலையில் மீதி பணத்தை லோன் போட்டு கொடுத்து விட்டு மாதம்தோறும் கட்டி வந்துள்ளார்.
ராஜசேகரின் திடீர் மறைவுக்கு பின்னர் மீதி தொகையை கட்ட முடியாமல் தவித்துள்ளார் அவரது மனைவி தாரா. அந்த வீட்டின் வாடகைத் தொகையை வைத்து காலத்தை தள்ளி வந்த நிலையில் பணம் கட்டாததால் அந்த வீட்டை ஏலம் விட முடிவு செய்துள்ளதாம் வங்கி.
இதற்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளதாக தெரிகிறது, இதனை தொடர்ந்து வீட்டை மீட்க உதவியை எதிர்பார்த்து தாரா காத்து கொண்டிருக்கிறார்.