வீட்டின் முன்பு இருந்த தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த 5 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார்.
திருப்பூர் அருகே பாரப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் விஜயகுமார் – தமிழ்ச்செல்வி தம்பதியர். பனியன் நிறுவனத்தில் டெய்லராக பணியாற்றி வரும் இவர்களுக்கு முகுந்தன் (8) மற்றும் தர்னீஸ் (5) ஆகிய இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த தர்னீஸ் திடீரென காணமல் போனதாக இராணி தேடிப் பார்த்துள்ளார்.
அப்போது வீட்டின் முன்பு இருந்த தண்ணீர் தொட்டியில் சிறுவன் தர்னீஸ் தவறி விழுந்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து உடனடியாக சிறுவனை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதனை செய்தனர். அப்போது சிறுவன் உயிரிழந்தது தெரியவந்தது.
விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவம் குறித்து அவிநாசி போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM