பெர்சிஸ்டென்ட் சிஸ்டம்ஸ் கூகுள் கிளவுட் பிரீமியம் பார்ட்னர் மீடியா அஜிலிட்டியை 71.7 மில்லியன் டாலர்களுக்கு வாங்குவதாக அறிவித்தது. இது இந்த நிறுவனத்தின் கிளவுட் சேவையை மேன்மைபடுத்தும். இது இந்த நிறுவனத்தின் வருவாயினை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் இந்த நிறுவனம் கடனையும் விரைவில் திரும்ப செலுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பங்கினை வாங்கலாம் என ஷேர்கான் நிபுணர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.
தற்போது ஐடி துறையில் தேவையானது அதிகரித்து வரும் நிலையில், இது வருவாயினை மேம்படுத்த உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெர்சிஸ்டென்ட் சிஸ்டம்ஸ் இலக்கு விலை
இதன் ( தற்போதைய விலை ) இன்றைய விலை நிலவரம் 2.35% அதிகரித்து, 4428.45 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதன் இலக்கு விலை 5550 ரூபாயாக நிர்ணயித்துள்ளது. இன்றைய உச்சம் 4465.40 ரூபாயாக நிர்ணயித்த நிலையில், இன்றைய குறைந்தபட்ச விலை 4358.15 ரூபாயாகவும் உள்ளது. இதன் 52 வார உச்ச விலை 4987.50 ரூபாயாகவும், இதே 52 வார குறைந்தபட்ச விலை 1734.05 ரூபாயாகவும் உள்ளது.
ஹெச்.டி.எஃப்.சி வங்கி
தனியார் துறையை சேர்ந்த முன்னணி நிறுவனமான ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் மீதான கட்டுப்பாடுகளை, ரிசர்வ் வங்கி நீக்கியுள்ளதாக இவ்வங்கி தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் ஹெச்.டி.எஃப்.சியின் டிஜிட்டல் சேவைகள் முழுவதும் மோசமாக பாதிக்கப்பட்டது. இதற்கு காரணம் பிரைமரி டேட்டா சென்டரில் ஏற்பட்ட மின்சார பாதிப்பு என்று வங்கி நிர்வாகம் ரிசர்வ் வங்கியிடம் தெரிவித்தது.
ஹெச்.டி.எஃப்.சி வங்கி – இலக்கு விலை
இதற்கிடையில் தான் ஹெச்.டி.எஃப்.சி வங்கிக்கு தற்காலிகமாக புதிய திட்டங்களை அறிமுகம் செய்வதை நிறுத்தியது. இதற்கிடையில் தான் புரோக்கிங் நிறுவனம் அதன் இலக்கு விலையை 1973 ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளது. இதன் தற்போதைய நிலவரம் 1.70% அதிகரித்து, 1448.15 ரூபாயாக வர்த்தகமாகி முடிவடைந்துள்ளது.
ஜூபிலியண்ட் ஃபுட்ஒர்க்ஸ்
ஜூபிலியண்ட் ஃபுட்ஒர்க்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான பிரதிக் போட்டா, ராஜினாமா செய்ததில் இருந்து, அந்த நிறுவனத்தில் நிலையற்ற தன்மையே நிலவி வருகின்றது. இது வளர்ச்சியினை குறைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்ந்து அதிகரித்து வரும் பணவீக்கத்தினால், விற்பனையிலும் சரிவினைக் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜூபிலியண்ட் ஃபுட்ஒர்க்ஸ்- இலக்கு விலை
இப்பங்கின் விலையானது 1.56% அதிகரித்து, 2563.45 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதன் உச்ச விலை 2588.50 ரூபாயாகும். இதன் குறைந்தபட்ச விலை 2588.50 ரூபாயாகும். இதன் 52 வார உச்ச விலை 4590 ரூபாயாகும். இதன் 52 வார குறைந்தபட்ச விலை 2443.30 ரூபாயாகும்.
stock recommendations! analysts buy recommendations buy on these stocks
stock recommendations! analysts buy recommendations buy on these stocks/தூள் கிளப்ப போகும் பங்குகள்.. ஐடி நிறுவனம் உள்படபல நிறுவனங்களின் பரிந்துரை..!