Tamil Serial Actress Priyanka Nalgari : தமிழ் திரையுலகில் சினிமா நடிகைகளை விட தற்போது சீரியல் நடிகைகளுக்கே அதிக வரவேற்பு இருந்து வருகிறது. வருடத்திற்கு ஒன்றிரண்டு படங்களில் நடிக்கும் சினிமா நடிகைகளை காட்டிலும் தினந்தோறும் சீரியல்கள் மூலம் இலலத்தரசிகளின் கவனத்தை ஈர்த்து வரும் நடிகைகளுக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம்.
அதே அளவுக்கு சீரியல்களும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருவதால், தொலைக்காட்சிகள் அவ்வப்போது புதிய சீரியல்கள் மற்றும் ரியாலிட் ஷோக்களை நடத்தி வருகிறது. இதில் நடித்து வரும் நடிகர் நடிகைகள் பலரும் சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வருகின்றனர். இதில் அவர்களை ஃபாலோ பண்ணும் ரசிகர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அந்த வகையில் தனது சிறப்பான நடிப்பின் மூலம் ரசிகர்கள் மனதில் ஸ்ராங்காக நின்றுள்ளவர் பிரியங்கா நல்காரி. தமிழ் தெலுங்கில் சில படங்களில் நடித்திருந்தாலும் இவரை ரசிகர்கள் மத்தியில் கொண்டு சென்றது சன்டிவியின் ரோஜா சீரியல் தான். சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் பிரியங்கா அவ்வப்போது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
பொதுவாக திரைத்துறையில் இருக்கும் நடிகர் நடிகைகள் உடற்பயிற்சி செய்வதில் ஆர்வம் காட்டி வருவது வழக்கமான ஒன்று. அதிலும் ஒரு சில நடிகைகள், தங்களின் உடற்பயிற்சி தொடர்பான வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் பிரியங்க நல்காரி வெளியிட்டுள்ள வீடியோ பதிவு ஒன்று இணையத்தில் வைராகி வருகிறது.
இந்த வீடியோவில் உடற்பயிற்சி செய்யும் உடையில் இருக்கும். பிரியங்கா தனது இரண்டு கைகளையும் தலையில் வைத்தக்கொண்டு, கால் கட்டை விரல்களை வைத்து பூமியில் இருந்து எழுந்து நிற்கிறார். 30 விநாடிகள் அப்படி இருந்து விட்டு சகஜ நிலைக்கு திரும்புகிறார். இதேபோல் தினசரி தவறால் செய்யதால் உடல் பலம் பெரும் தவறாமல் செய்யுங்கள் என்று பதிவிட்டுள்ளார்.