டெக் சந்தையில் உள்ள அனைத்து நிறுவனங்களையும் ஓரங்கட்டும் விதமாக சியோமி நிறுவனம் புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது ரெட்மி பிராண்டில் இருந்து குறைந்த விலை ஸ்மார்ட்போனை நிறைந்த தரத்துடன் வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் இன்று (மார்ச் 17) அறிமுகம் செய்யப்பட்ட
ரெட்மி 10
ஸ்மார்ட்போனை, வாடிக்கையாளர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. சீனாவில்
Redmi
10C என்று அறிமுகமான இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில்
Redmi 10
என்ற பெயரைப் பெற்றுள்ளது.
ரெட்மி 10 ஸ்மார்ட்போனானது, ஸ்னாப்டிராகன் 680 4ஜி புராசஸர், 50 மெகாபிக்சல் முதன்மை கேமரா, MIUI 13 ஆகிய சிறப்பம்சங்களைக் கொண்டு வெளியாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் தொடக்க விலை ரூ.10,999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
11ஜிபி வரை டர்போ ரேம் – விற்பனைக்கு வந்த Poco M4 Pro ஸ்மார்ட்போன்!
ரெட்மி 10 அம்சங்கள் (Redmi 10 Features)
புதிய ரெட்மி போனில், 6.71″ அங்குல முழு அளவு எச்டி+ எல்சிடி டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. செயல்திறனுக்காக 6nm நானோ மீட்டரில் கட்டமைக்கப்பட்ட
Qualcomm Snapdragon
680 4ஜி சிப்செட் பயன்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், Adreno 610 கிராபிக்ஸ் எஞ்சினாக செயல்படுகிறது.
Android
11 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்ட MIUI 13 ஸ்கின் இதில் நிறுவப்பட்டுள்ளது. இரண்டு வேரியண்டுகள் இந்தியாவில் வெளியாகியுள்ளது.
ரெட்மி 10 கேமரா (Redmi 10 Camera)
கேமராவை பொருத்தவரை, பின்பக்கம் இரு சென்சார்கள் கொண்ட அமைப்பை இந்த ஸ்மார்ட்போன் கொண்டிருக்கிறது. அதில் முதன்மை சென்சாராக 50 மெகாபிக்சலும், கூடவே 2 மெகாபிக்சல் லென்ஸும் பயன்படுத்தப்பட்டுள்ளது. செல்பி, வீடியோ அழைப்புகளுக்காக வைட் ஆங்கில் 5 மெகாபிக்சல் சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனில் Widevine L1 Certification ஆதரவு வழங்கப்பட்டுள்ளது. இந்த அம்சமானது, ஓடிடி தளங்களில் எச்டி தரத்திலான வீடியோக்களை பார்க்க உதவும். பட்ஜெட் விலையில் வரும் ஸ்மார்ட்போன்களில் மட்டுமே அளிக்கப்பட்டு வந்த இந்த அம்சத்தை, ரெட்மி குறைந்த விலை ஸ்மார்ட்போனில் கொண்டு வந்தது கூடுதல் சிறப்பாகப் பார்க்கப்படுகிறது.
50MP கேமரா கொண்ட குறைந்த விலை போன் – விற்பனைக்கு வந்த ரியல்மி சி35!
ரெட்மி 10 விலை (Redmi 10 price in India)
புதிய ரெட்மி ஸ்மார்ட்போனானது, ப்ளூடூத் 5.1, 3.5mm ஜாக், ஜிபிஎஸ் போன்ற ஆதரவுகளையும் கொண்டிருக்கும். ஸ்மார்ட்போனை சக்தியூட்ட 6000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இதனை ஊக்குவிக்க 18W பாஸ்ட் சார்ஜர் போனுடன் வருகிறது. கறுப்பு, நீலம், பச்சை ஆகிய மூன்று வண்ணத் தேர்வுகளில் இந்த 4ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ரெட்மி 10 ஸ்மார்ட்போனின் 4GB ரேம் + 64GB ஸ்டோரேஜ் மெமரி வேரியன்டின் விலை ரூ.10,999 ஆகவும், 6GB ரேம் + 128GB ஸ்டோரேஜ் மெமரி வேரியன்டின் விலை ரூ.12,999 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பக்கா பட்ஜெட் புராசஸர் – Realme அறிமுகம் செய்த 9 SE 5G போன்!
மார்ச் 24 ஆம் தேதி இந்த ஸ்மார்ட்போன் Mi.com, Flipkart.com, Mi Home, Mi Studio கடைகள் ஆகியவற்றில் விற்பனைக்குக் கொண்டுவரப்படுகிறது. HDFC BANK Credit Card பயனர்கலுக்கு கூடுதலாக ரூ.1000 கேஷ்பேக்கும் வழங்கப்படுகிறது.
Read more:
கடைகளில் விற்பனைக்கு வந்த JioPhone Next மொபைல் – விலை ரொம்ப கம்மி!என்ன பண்ணி வெச்சிருக்கீங்க iQOO; மண்ட மேல கொண்ட தெரியுது!Google I/O நிகழ்வு குறித்து அறிவிப்பு வெளியிட்ட சுந்தர் பிச்சை!