நரிக்குறவ சமூகத்தைச் சேர்ந்த மாணவிகளை முதல்வர் ஸ்டாலின் சந்தித்து அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்படும் என்று உறுதியளித்தார்.
பிரபல தமிழ் யூ-டியூப் சேனலுக்கு ஆவடி பேருந்து நிலையம் அருகே வசிக்கும் நரிக் குறவ சமூகத்தைச் சேர்ந்த மாணவிகள் பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து பேசினர்.
மேலும், பள்ளிக்கு தாங்கள் செல்வதற்கு முன் இருந்த அச்சத்தையும் அதன் பிறகு அவர்கள் சக மாணவிகளுடன் இணைந்து பழகியது குறித்தும் அந்தப் பேட்டியில் கூறினர்.
அப்போது, சில மாணவிகள் இவர்களுடன் பழகத் தயங்கியதும் பின்னர் தோழிகளானது குறித்தும் உருக்கமாக தெரிவித்திருந்தனர்.
இந்த வீடியோ வைரலானது. திமுக எம்.பி. கனிமொழி இந்த வீடியோவை ஷேர் செய்து, இந்தச் சிறுமிகளிடம் இருந்து கற்றுக் கொள்ள நிறைய இருந்தது என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், ஆவடியில் உள்ள பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வரும் ஆர். பிரியா, அம்பத்தூர் எபினெசர் பள்ளியில் படித்துவரும் கே.திவ்யா, 7-ஆம் வகுப்பு மாணவி எஸ்.எஸ்.தர்ஷினி ஆகியோர் முதல்வர் ஸ்டாலினை பார்த்தனர்.
இவர்களுடன் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உடனிருந்தார்.
முதல்வருடன் பேசும்போது “அங்கிள்” என்று அன்புடன் மாணவிகள் அழைத்தனர். சில கோரிக்கைகளையும் அவர்கள் முன்வைத்தனர்.
தன்னம்பிக்கை எதிரொலிக்கும் சகோதரி திவ்யாவின் பேச்சு எனக்குள் எதிரொலித்துக்கொண்டே இருக்கிறது!
திவ்யா, ப்ரியா, தர்ஷினி என நமது தகுதியும் திறமையும் யாருக்கும் சளைத்ததல்ல!
நாம் முன்னேறி வருகிறோம்; தடைக்கற்களை உடைத்து #DravidianModel-ல் நாம் செதுக்கும் சிற்பங்கள் உயர்ந்து விளங்கும்! pic.twitter.com/4p0THTEUFV
— M.K.Stalin (@mkstalin) March 16, 2022
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவிலிருந்து பழங்குடியினர் சமூகத்திற்கு நரிக்குறவர் சமூகத்தினரை மாற்ற வேண்டும் என்றும் தங்கள் பகுதியை மேம்படுத்த வேண்டும், கல்விக்கு உதவ வேண்டும் என்றும் அந்த மாணவிகள் முதல்வரிடம் கோரிக்கை முன்வைத்ததாக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக மின்வாரிய முறைகேடு பற்றி செபி, சி.ஏ.ஜி அமைப்புகளில் புகார்: அண்ணாமலை உறுதி
அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று முதல்வர் உறுதி அளித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“