நீலகிரி மாவட்டம் உதகை அருகே கல்லட்டி மலை பாதையில் 50 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 இளைஞர்கள் படுகாயமடைந்தனர்.
நாமக்கல் செல்லப்பட்டியை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் 7 பேர், கல்லட்டி மலை பாதை வழியாக முதுமலைக்கு சென்று கொண்டிருந்தனர்.
அப்போது 22-வது கொண்டை ஊசி வளைவில் கட்டுப்பாட்டை இழந்த கார் திடீரேன சாலையோரத்தில் இருந்த 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில், காரில் பயணித்த 7 பேரும் படுகாயமடைந்த நிலையில், தகவலறிந்து வந்த பொதுமக்கள் 7 பேரையும் மீட்டு உதகை தலைமை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.