நியாமி:
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான புர்கினா பாசோ நாட்டின் தலைநகரான ஓவாகடூகோவில் இருந்து, நைஜர் நாட்டின் தலைநகர் நியாமி நோக்கி, பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.
ஃபோனோ கிராமம் அருகே இரு சக்கர வாகனங்களில் வந்த 12 ஜிகாதிகள், அந்த பேருந்தை மறித்து நிறுத்தினர்.
பின்னர் அதில் இருந்து பயணிகளை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 19 பயணிகள் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். இதை தொடர்ந்து அந்த பேருந்தை ஜிகாதிகள், தீ வைத்து எரித்ததாக போக்குவரத்து நிறுவனங்களின் சங்கம் தெரிவித்துள்ளது.
அல்கொய்தா மற்றும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய ஜிகாதி குழுவினர், புர்கினா பாசோ நாட்டில் இது போன்ற தாக்குதல்களை நடத்தி உள்ளனர்.
ஆனால் இந்த முறை நடைபெற்ற பேருந்து தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பவில்லை.