படகு சவாரி தனியாருக்கு அனுமதி | Dinamalar

புதுச்சேரி-சுற்றுலா துறை சார்பில், தனியார் மூலம் படகு சவாரி துவங்கப்பட உள்ளது.புதுச்சேரியில் சுற்றுலாவை மேம்படுத்த அரசு தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதையொட்டி, சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில், உப்பளம் புதிய துறைமுகத்தில் உள்ள உப்பங்கழியில் இருந்து சுண்ணாம்பாறு வரை படகு சவாரி துவங்கப்பட உள்ளது. 60 நபர்கள் அமர்ந்து செல்லக்கூடிய வகையில் இந்த படகு சவாரி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதற்கான படகை இயக்குவதற்கான உரிமை ஆணையை, படகு உரிமையாளரிடம் முதல்வர் ரங்கசாமி நேற்று சட்டசபை அலுவலகத்தில் வழங்கினார். படகு சவாரி செய்திட, ஒரு நபருக்கு ரூ.500 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.நிகழ்ச்சியின் போது, சுற்றுலாத் துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், அரசு கொறடா ஆறுமுகம், ரமேஷ் எம்.எல்.ஏ., சுற்றுலா துறை இயக்குநர் பிரியதர்ஷினி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.