பாம்பின் முன் கைகளை ஆட்டி விளையாடிய நபர்! சீறிட்டு பாய்ந்த நாகப்பாம்பு – வைரல் வீடியோ

பெங்களூரு,
கர்நாடக மாநிலம் சிர்சியைச் சேர்ந்த பாம்பு ஆர்வலரான மாஸ் சயீத் என்ற நபர், மூன்று நாகப்பாம்புகளைக் கையாளும் வீடியோ வைரலாகி வருகிறது.
அவர் பாம்புகளுக்கு முன்னால் குனிந்து, அவற்றின் வாலை இழுத்து, கைகளை அசைத்து சீண்டல்களை செய்தார். ஆனால், பாம்புகள் இவற்றையெல்லாம் அச்சுறுத்தும் தாக்குதல் என நினைத்து அவரை சீண்டின. 
அவரது யூடியூப் சேனல் முழுவதும் இது போன்ற வீடியோக்கள் நிரம்பி உள்ளன.
இந்த வீடியோவில் பாம்பு அந்த நபர் மீது பாய்ந்து அவரது முழங்காலை கடித்துள்ளது. அதிர்ச்சியடைந்த அவர், அதை இழுக்க முயன்றபோதும் பாம்பு அவரை விட்டிவிலக மறுத்தது.
அவர் 3 நாகங்களை பிடித்து அவற்றின் முன்பு குனிந்து உட்கார்ந்து கொண்டு, தனது கைகளை அவற்றின் முன் நீட்டி அங்குமிங்கும் அசைத்து கொண்டிருந்தார். அப்போது யாரும் எதிர்பாராத விதத்தில் திடீரென ஒரு நாகம் அவர் மீது சீறிட்டு பாய்ந்தது. அவரது கால் மூட்டுப்பகுதியை விடாமல் கவ்வி கொண்டது.
பின்னர் அவர் ஆபத்தான நிலையில், ருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. 
அவருக்கு 46 விஷ எதிர்ப்பு குப்பி மருந்துகள் செலுத்தப்பட்டுள்ளதாக  கூறப்படுகிறது. பாம்புக்கடி சிகிச்சை மற்றும் கல்விச் சங்கத்தின் தலைவரும் நிறுவனருமான பிரியங்கா கடம் தனது பேஸ்புக் பதிவில் இதனை தெரிவித்தார்.
“நாகப்பாம்புகளைக் கையாளும் ஒரு மோசமான வழிமுறை இது” என்று குறிப்பிட்டு  ஐ எப் எஸ் அதிகாரி சுசாந்தா நந்தா தனது டுவிட்டரில் இந்த வீடியோவை பதிவிட்டுள்ளார். 

மங்களூரைச் சேர்ந்த பாம்பு மற்றும் விலங்குகளை மீட்கும் அதுல் பாய் என்பவர், இதுபோன்ற அபாய விளையாட்டுகளுக்கு எதிராக எச்சரித்துள்ளார். பாம்புகளை தேவையில்லாமல் கையாள்வதும் விளையாடுவதும் கடுமையான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்று அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.