செங்கல்பட்டு அருகே பாலாற்று மேம்பாலத்தில் சீரமைப்பு பணிகள் நிறைவு பெற்றதை அடுத்து, நாளை முதல் அதில் வழக்கமான போக்குவரத்து தொடங்கப்பட உள்ளது.
செங்கல்பட்டு அருகே சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பாலாற்றின் குறுக்கே கடப்பட்ட 2 மேம்பாலங்கள் பழுதடைந்ததை அடுத்து, கடந்த மாதம் முதல் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தன. இதைத் தொடர்ந்து போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு திருச்சியில் இருந்து சென்னை நோக்கி வரும் வாகனங்கள் திருப்பி விடப்பட்டன.
இரு பாலங்களில் ஒரு பாலம் சீரமைக்கப்பட்டு அதில் சென்னை – திருச்சி மார்க்கமாக ஒருவழிப் பாதையாக போக்குவரத்து செயல்பட்டு வந்தது. இந்நிலையில் இரண்டாவது பாலத்திலும் சீரமைப்பு பணிகள் நேற்றுடன் நிறைவு பெற்றதை தொடர்ந்து நாளை மாலை முதல் போக்குவரத்து தொடங்கப்பட உள்ளது.