புடினிடம் போருக்கு எதிராக பேசுவது தற்கொலைக்கு சமம் என ரஷ்ய தொழிலதிபர் Mikhail Fridman தெரிவித்துள்ளார்.
பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தால் பொருளாதார தடைவிதிக்கப்பட்டுள்ள ரஷ்யாவின் முக்கிய தொழிலதிபர்களில் ஒருவரும், ஆல்பா வங்கியின் உரிமையாளருமான Mikhail Fridman கூறியதாவது, உக்ரைன் மீது தொடர்ந்து போர் தொடுத்து வரும் புடினை, பொருளாதார தடைகளால் தடுக்க முடியாது.
ரஷ்ய தொழிலதிபர்களுக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம் புடினுக்கு நெருக்கடி தர நினைப்பது, எக்காலத்திலும் நடக்காத ஒன்று.
பொருளாதார தடைகளால், நான் புடினிடம் போரை நிறுத்த சொல்லி, அவர் நிறுத்துவார் என ஐரோப்பிய ஒன்றியத்தில் அதிகாரத்தில் உள்ளவர்கள் நம்புகிறார்கள்.
இதன் மூலம், அவர்களுக்கு ரஷ்யா எப்படி செயல்படுகிறது என்பது குறித்த புரிதல் இல்லை என்பது அம்பலமாகிறது.மேலும் இது எதிர்காலத்திற்கு ஆபத்தானது.
புடினின் நெருங்கிய வட்டாரத்தை சேர்ந்தவர்கள், அவரிடம் போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து விவாதிப்பதற்கு வாய்ப்பே இல்லை.
புடினுக்கும் மற்றவர்களுக்கும் இடையிலான அதிகார தூரம், பூமிக்கும் பிரபஞ்சத்திற்கும் இடையிலான தூரத்தைப் போன்றது.
புடினிடம் பேருக்கு எதிராக கருத்து கூறுவது, தற்கொலைக்கு சமமாகும் என Mikhail Fridman தெரிவித்துள்ளார்.