தென் கொரியாவின் புதிய அதிபராக முன்னாள் உயர்மட்ட வழக்கறிஞரான யூன் சுக் யோல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, யூன் சுக் யோலை தொடர்புக் கொண்ட பிரதமர் மோடி வாழ்த்துக்களையும் தெரிவித்தார். பின்னர் இருவரும் பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசினர்.
இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
தென் கொரியாவில் சமீபத்தில் நடந்த தென்கொரிய அதிபர் தேர்தலில் வெற்றிப் பெற்ற யூனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அப்போது உலகளாவிய சூழலில் இந்தியா – கொரியா இடையேயான சிறப்புமிக்க கூட்டாண்மையை மேலும் விரிவுபடுத்துதல் மற்றும் ஆழப்படுத்துதல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை தலைவர்கள் இருவரும் ஒப்புக் கொண்டுள்ளனர்.
துரிதப்படுத்தப்பட்ட இருதரப்பு ஒத்துழைப்பிற்கான சாத்தியக்கூறுகளை வழங்கும் பல்வேறு துறைகள் குறித்து விவாதித்த இருவரும் இணைந்து செயல்படவும் உறுதி ஏற்றுள்ளனர்.
இந்தியா மற்றும் தென் கொரியா இடையே தூதரக உறவுகளை நிறுவியதன் 50-வது ஆண்டு விழாவை அடுத்த ஆண்டு கூட்டாக கொண்டாடுவதற்கான விருப்பத்தையும் இருவரும் வலியுறுத்தி உள்ளனர்.
மேலும், இந்தியாவிற்கு வருமாறு யூனிற்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்..
இஸ்ரேலில் புதிய உருமாறிய கொரோனா கண்டுபிடிப்பு