பெங்களூரில் போர் விமானங்களுக்கான கட்டுப்பாட்டு அமைப்புக்கான 7 மாடிக் கட்டடத்தைப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார்.
பெங்களூரில் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பின் சார்பில் போர் விமானங்களுக்கான கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
தரைத்தளம் உட்பட மொத்தம் 7 தளங்களைக் கொண்ட இந்தக் கட்டடத்தைப் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு, உயர்தரக் கட்டுமானத் தொழில்நுட்பத்துடன் சாதனை அளவாக 45 நாட்களில் கட்டி முடித்தது. இரும்புத் தூண்கள், உத்தரங்கள், சிமென்ட் சிலாப்கள் ஆகியவற்றைக் கொண்டு குறுகிய காலத்தில் கட்டப்பட்ட இந்தக் கட்டடத்தைப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று திறந்து வைத்தார்.
அப்போது கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை உள்ளிட்டோர் உடனிருந்தனர்.