ஹாமில்டன்,
நியூசிலாந்தில் நடந்து வரும் பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று ஹாமில்டனில் நடைபெற்ற 16-வது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க, நியூசிலாந்து அணியை எதிர்கொண்டது.
முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 47.5 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 228 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் சோபி டிவெய்ன் அதிரடியாக விளையாடி 93 ரன்கள் குவித்தார்.
இதையடுத்து 229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்க அணி களமிறங்கியது. தொடக்க வீராங்கனையாக களமிறங்கிய லாரா வால்வார்டட் 67 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
அதன் பிறகு சிறப்பாக விளையாடிய அந்த அணியின் கேப்டன் சுனே லூஸ் அரை சதம் அடித்து ஆட்டமிழந்தார். இறுதி ஓவரில் வெற்றிக்கு 6 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 3 பந்துகள் மீதமிருக்க தென் ஆப்பிரிக்க அணி 229 ரன்கள் குவித்து 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.