மதுரை: சாத்தான்குளம் காவல்நிலையத்தில் உயிரிழந்த மகேந்திரனின் மரண வழக்கை முறையாக விசாரிக்கக் கோரிய வழக்கு முடித்துவைக்கப்பட்டது. விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்ற சிபிசிஐடி தரப்பில் வாதத்தை ஏற்று உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
