நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள்
ஐஸ்வர்யா
சில மாதங்களுக்கு முன்பு தனது கணவர் தனுஷை பிரிந்தார். இந்த பிரிவு ரசிகர்கள் மற்றும் சினிமா வட்டாரங்களை சார்ந்தவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மேலும் இவர்களை மீண்டும் சேர்த்து வைக்க இவர்களது குடும்பத்தினர்கள் பல முயற்சிகளை செய்து வந்தார்கள்.
ஆனால் அந்த முயற்சிகளுக்கு எந்த பலனும் கிடைத்ததாக தெரியவில்லை.
தனுஷ்
மற்றும் ஐஸ்வர்யா இருவரும் அவர்கள் முடிவில் அழுத்தமாக இருப்பதாகவே தெரிகின்றது. இந்நிலையில் இவர்களது பிரிவினால்
ரஜினி
மிகவும் மனதளவில் பாதிக்கப்பட்டார்.
தனுஷை நினைத்து வருத்தத்தில் ரசிகர்கள்.. இதுதான் காரணம்..!
தன் மகள் ஐஸ்வர்யா அவரது பிள்ளைகளின் நலனை கருத்தில் கொல்லாது திடீரென இந்த முடிவை எடுத்ததில் அவருக்கு சிறிதும் உடன்பாடில்லை. எனவே இதனால் மனமுடைந்த ரஜினி தனது வீட்டிலேயே தனிமையில் யாரிடமும் பேசாது இருந்துவந்தார். மேலும் தன் மகள் ஐஸ்வர்யாவை போனில் ரஜினி திட்டியதாகவும் தகவல்கள் வந்தன.
இந்நிலையில் தற்போது ரஜினியின் செயலால் ரசிகர்கள் அனைவரும் ஆச்சர்யமடைந்துள்ளனர். ஐஸ்வர்யா இயக்கிய
ஆல்பம்
பாடலை ரஜினி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் ஐஸ்வர்யா உருவாக்கிய பாடலை வெளியிடுவதில் மகிழ்ச்சி, என் மகள் ஒன்பது வருட இடைவெளிக்கு பின் இயக்கத்தில் இறங்கியுள்ளார். அவருக்கு எனது வாழ்த்துக்கள் என பதிவிட்டிருந்தார்.
இதற்கு நன்றி தெரிவித்து ஐஸ்வர்யாவும் பதில் பதிவிட்டார். இதனை பார்த்த ரசிகர்கள் ஐஸ்வர்யா விவாகரத்தினால் அவர் மீது ரஜினி கோபம் கொண்டதாக கூறப்பட்டதே. தற்போது இவர்கள் நடந்துகொள்வதை பார்த்தால் ரஜினி தனது மகள் ஐஸ்வர்யாவை மன்னித்து ஏற்றுக்கொண்டாரா என கேட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தெய்வம் தல.. AK – வ பாத்தா போதும்…இது இதுதான் எங்களுக்கு தீபாவளி!